நான் அமைச்சராக இருந்தாலும் என்னால் தொகுதியில் சில பணிகளை செய்ய முடியவில்லை என அமைச்சர் சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

தாம்பரம் அருகே மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இதனை சமீபத்தில் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து 55 நாட்கள் ஆகி விட்டது. மாற்றுக்கட்சிக்கு என்ன பண்ணுவது என தெரியவில்லை. என்ன சொல்லி இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பண்ணுவது என தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர். எப்படி குறை சொல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். விஜய் முதலமைச்சரானதும் 200 யூனிட் இலவச மின்சாரம் சொன்னார்கள். பெண்களுக்கான பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் உறுதி செய்யும் பொருட்டு சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை அறிவித்தார்.

அதேபோல் டாஸ்மாக்கில் இரவு 10 மணிக்கு மேலேயும், காலை நேரத்திலேயும் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்தது. அதெல்லாம் இப்போது சரி செய்யப்பட்டு சொன்ன நேரத்தில் திறந்து மூடுகிறார்கள். எந்த அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என முதலமைச்சர் விஜய் சொல்லியிருக்கிறார். நான் உங்களுடன் இருக்கிறேன் என கரூரில் அவர் கூறினார். அந்த மாதிரியான ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது.

நாங்க என்னதான் சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இருந்தாலும் எங்களால் சில பணிகளை செய்ய முடியவில்லை. அங்க இருக்குற கவுன்சிலர்கள், தலைவர்கள் எல்லாம் மேல இருப்பவர்களை வேலை செய்ய விடாமல் அதிகாரிகளை தடுத்து நிறுத்தும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் தவெகவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்.. வெளியான ஆதாரம்!

இன்னைக்கு நம் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு மதிப்பு நன்றாக தரப்படும். அதற்கு மரகதம் குமரவேல் அவர்களே சான்று. அதிமுகவில் இருந்ததை விட தவெகவில் மகாராணி போல வைத்துள்ளோம். அதேபோல் மாவட்டச் செயலாளர் நம் வீட்டில் இருக்கும் ஒருவரைப் போலவே நடப்பவர். அவர்கள் இருவரும் உங்களை நல்லபடியாக கடைசி வரை பார்த்துக் கொள்வார்கள் என அமைச்சர் சரத்குமார் தெரிவித்தார்.

Source: Read Full Article