Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!

Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!
News Image

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக மேயர் பிரியா ராஜன் மீது புகார் எழுந்துள்ளதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவெக அரசின் தொடரும் நடவடிக்கைகள்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களும், ஊழியர்களும் மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேசமயம் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு தற்போது வரை தொடங்கப்படாமல் இருக்கும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவை தேவைக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாக தவெக அரசு குற்றம் சாட்டி வருகிறது. பல துறை ரீதியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யாவும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது.

சென்னை மாநகராட்சியில் ஊழலா?

இதற்கிடையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளின் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ள விஜய் பல்வேறு விதமான முக்கிய முடிவுகளையும் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மேயர் பிரியா ராஜன் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அப்படியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாக 100 பள்ளிகளுக்கு ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் பிரிண்டர் மெஷின் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு 100 பள்ளிகளுக்கு ரூபாய் 22.12 லட்சத்தில் பிரிண்டர்களை வாங்கிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 37.78 லட்சம் மீதமாகி உள்ளது.

இந்த சம்பவம் பல்வேறு விதமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பொதுவாக பொருட்களின் சந்தை மதிப்பீடு என்பது மாறும் என்ற நிலையில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதலாக சில கோடிகள் மதிப்பிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த பிரிண்டர் விவகாரத்தில் அப்படியே 60 சதவிகித தொகை அதிகமாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ளது

இதனால் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் மதிப்பீடு கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மேயர் பிரியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 புதிய திட்டங்களின் மதிப்பை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்தும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks