DMK TVK CJP: தேர்தலுக்கு முன்பாக நீடித்து வந்த தீவிர பாஜக எதிர்ப்பு தமிழ்நாட்டில் தற்போது நீர்த்துபோயுள்ளதா? என பொதுமக்களுன் பேச தொடங்கியுள்ளனர்.

CJP போராட்டத்தால் குலுங்கும் டெல்லி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக CJP அமைப்பினர் தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நாட்டையே அதிரச் செய்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போலீசாரே கல்வீச்சில் ஈடுபட்டது, வாகனங்களை அடித்து உதைத்து, மாணவிகளுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தது போன்ற சம்பவங்கள் அராஜகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு மாநில அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களையும் ,எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றன. ஆனால், நாட்டிலேயே பாஜகவை மிகவும் தீவிரமாக எதிர்க்கும் மாநிலமாக கூறப்படும் தமிழ்நாட்டில், இந்த போராட்டம் தொடர்பாக எந்தவொரு அரசியல் தலைவரும் வலுவான கருத்துகளை தெரிவிக்கவில்லை.

உயிர்கள் போகிறது CM விஜய் சார்?

நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, அவரது வீட்டிற்கே நேரில் சென்று நடிகராக இருந்த விஜய் ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில் தான் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மனமுடைந்து, தமிழ்நாட்டில் மட்டும் 3 பேர் உட்பட தேசிய அளவில் சுமார் 20 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், இதுகுறித்தோ அல்லது அண்மையில் டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறையால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை குறித்தோ முதலமைச்சர் விஜய் எந்தவொரு எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்காமலே தொடர்கிறார்.

ராகுல் காந்தி கைதான நடவடிக்கையை மட்டும் கண்டிக்கத்தக்கது என தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன பொருள்? கொள்கை எதிரி பாஜகவை விமர்சிக்க விஜய் அஞ்சுகிறாரா? அல்லது ஆட்சி நீடிக்கவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் மத்திய அரசின் தயவு தேவை என வாய் திறக்க தயங்குகிறா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திமுகவின் பாஜக எதிர்ப்பு எங்கே?

மூச்சுக்கு முந்நூறு முறை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு உள்ளே வந்துவிடும் என கூறியே சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொண்டது. ஆளுங்கட்சியாக இருந்தபோது எந்தவித பாகுபடும் இன்றி பாஜகவிற்கு எதிராக களமாடி வந்தது. ஆனால், தற்போது அந்த கட்சியின் செயல்பாடு அப்படி இல்லை. மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்ட பதிவில், “இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு பதிலடி கொடுக்கிறது” குறிப்பிட்டு இருந்தார். அதவாவது திமுக பின்பற்றி வந்த “ஒன்றிய அரசு” என்பதோ, அரசுக்கு ”கண்டனம்” என்பதோ அந்த பதிவில் இல்லை.

இதையும் படியுங்கள்: TVK Vijay:”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு CM விஜயின் தவெக வன்மையான கண்டனங்கள்

இதனால், தேர்தலுக்கு முன்பாக திமுகவால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர பாஜக எதிர்ப்பு தற்போது நீர்த்துபோனது ஏன்? வழக்குகளுக்காக அஞ்சுகிறீர்களா? அல்லது மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பாஜகவுடன் கூட்டணி சேர முயல்கிறீர்களா? அனுபவம் இல்லாத கட்சி என்று தவெகவை விமர்சிக்கும் வேளையில், தமிழ்நாட்டின் மிகவும் வலுவான கட்டமைப்பை கொண்ட கட்சியான திமுகவும் மக்கள் நலனில் இப்படி பின் வாங்கலாமா? என பொதுமக்களும், நெட்டிசன்களும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source: Read Full Article