Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !

Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
News Image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை மீட்கவும், மீனாட்சியம்மன் கோயிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் கோரிய வழக்கு. கோயிலின் குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. - கோயில் நிர்வாகம் தரப்பில் தகவல்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக மீட்டு பராமரிக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை

அரசுத் தரப்பில், " வீரவசந்தராயர் மண்டப  பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து விடும். கோயிலின் குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், " ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்கப்பட வேண்டிய தொகை  வசூலிக்கப்படாமல் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks