ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்

ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
News Image

பிளஸ் - 2 தேர்வில் தோல்வி

சென்னை பெருங்குடி குறிச்சி நகரை சேர்ந்தவர் பாபுலால் இவரது மனைவி சேனிதேவி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பாபுலால் அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர்களது மகன் ராகேஷ் ( வயது 19 ) பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தால் அவரது தாய், மகனைத் தொடர்ந்து கண்டித்து வந்ததார். தேர்வு எழுதாமல் சரியாகப் படிக்காதது குறித்தும், எதிர்காலம் குறித்தும் தாய் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கழுத்தை நெரித்து கொலை

இந்நிலையில் பாபுலாளுடைய உறவினர் இறந்து விட்டதால் அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார். ராகேஷ் திடீரென தூங்கிக் கொண்டிருந்த அவரது தாயை செனிதேவியை துண்டால் கழுத்தை நெரித்தும் அதே போல கத்தியால் குத்தியும் , வீட்டில் இருந்த உரலை மேலே தூக்கி போட்டும் கொலை செய்துள்ளார்.

தாயை தாக்கியவுடன் மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துரைப்பாக்கம் போலீசார் , தாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் , தாயைக் கொலை செய்த மகனைக் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் , கொலை செய்த இளைஞர் கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி , அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks