IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!

IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
News Image

டி20 கிரிக்கெட்டில் உலகில் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகளவு வீரர்களை உருவாக்கி வைத்துள்ள இந்திய அணி சர்வதேச அளவில் தடுமாறி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த டி20 தொடரை முழுமையாக இழந்த பிறகு ஜிம்பாப்வே-யுடன் இன்று மீண்டும் டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது.

ஜிம்பாப்வேயுடன் மோதும் இந்தியா:

ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே நகரத்தில் இன்று இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. முழுக்க முழுக்க இளம் பட்டாளத்தை கொண்ட அணியாக இந்திய அணி கடந்த தொடரில் களமிறங்கியது. இந்த தொடரிலும் இந்திய அணி அப்படியே களமிறங்கியுள்ளது.

முதலில் பந்துவீசி வரும் இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டி வருகிறது. இளம் வீரர்களான மயங்க் யாதவ், அசோக் சர்மா, பிரின்ஸ் யாதவ் கட்டுக்கோப்பாக வீசி வருகின்றனர். இவர்களது சிறப்பான பந்துவீச்சால் தடுமாறும் ஜிம்பாப்வே அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

வெற்றிப்பாதைக்கு திரும்புமா?

தொடக்க வீரர் ப்ரையன் முதல் பந்திலே டக் அவுட்டானார். பென் கரன் 10 ரன்களுக்கும்,  மையர்ஸ் 6 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ரன்களுக்கும் அவுட்டாகினர். இந்த தொடரில் மொத்தம் 3 டி20 போட்டிகள் நடக்கிறது. மொத்தமுள்ள 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர்.

இளம் படை:

அதேசமயம், ஜிம்பாப்வே அணி டி20 போட்டியில் சிறப்பான அணியாகவே திகழ்ந்து வருகிறது. இதனால், அவர்கள் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. இந்திய அணியில் இளம் வீரர்களான சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான்கிஷன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் களமிறங்கியுள்ளனர்.

அச்சுறுத்தும் ஜிம்பாப்வே:

இந்திய அணியின் மிடில் ஆர்டர் தடுமாறி வரும் சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே ஆகியோருக்கு தங்களை நன்றாக நிலைநிறுத்திக் கொள்ள இந்த தொடர் ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். ஜிம்பாப்வே அணியில் இன்றைய போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டான ப்ரையன் பென்னட், பென் கரன், மையர்ஸ், சிக்கந்தர் ராசா அந்த அணியின் சிறந்த வீரர்கள் ஆவார்கள். பந்துவீச்சில் அந்த அணியின் முசபர்பானி, ரிச்சர்ட் நிகர்வா, நியம்ஹியூரி, ப்ராட் ஈவன்ஸ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மிகுந்த நெருக்கடி அளிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks