பிளஸ்-2 & நீட் பாஸ் பண்ணியிருக்கீங்களா? - சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ரெடியாகுங்க!

பிளஸ்-2 & நீட் பாஸ் பண்ணியிருக்கீங்களா? - சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ரெடியாகுங்க!
News Image

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை ஆயுஷ் (BSMS, BUMS, BHMS) மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிற மாநில மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை ஆயுஷ் (BSMS, BUMS, BHMS) மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பச் பதிவு தொடங்கியுள்ளது. இதுகுறித்த விவரங்களை புதுச்சேரி செண்டாக் (CENTAC) ஒருங்கிணைப்பாளர் முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி ‘செண்டாக்’ (CENTAC) ஒருங்கிணைப்பாளர் முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

5 மருத்துவ இடங்கள்

2026–2027-ஆம் கல்வியாண்டில், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கப்படும் இளநிலை பி.எஸ்.எம்.எஸ். (சித்தா), பி.யு.எம்.எஸ். (யுனானி) மற்றும் பி.எச்.எம்.எஸ். (ஹோமியோபதி) மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'நீட்' (NEET) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படும்.

அதன்படி, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.எம்.எஸ். - 2 இடங்கள், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பி.எச்.எம்.எஸ். - 1 இடம், பெங்களூரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பி.எச்.எம்.எஸ். - 1 இடம், சென்னை அரசு யுனானி கல்லூரியில் பி.யு.எம்.எஸ். - 1 இடம் என மொத்தம் 5 இடங்கள் உள்ளன.

கடைசி தேதி

இதற்கான இணையவழி விண்ணப்பப் படிவம் மற்றும் விவரக்குறிப்பை www.tnayushselection.org என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு செண்டாக் இணையதமான www.centacpuducherry.in வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

பிளஸ்-2 மதிப்பெண் மூலம் சேர்க்கை

இதேபோல் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2 இடங்களுக்கு www.tnayushselection.org என்ற இணையதளம் மூலம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks