Source: Read Full Article
நள்ளிரவு குத்தாட்டம்: உயர்நீதிமன்ற தடையை மீறியதாக குற்றச்சாட்டு – தாரமங்கலத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி?
அலறும் ஒலிபெருக்கி.. அரங்கேறும் அநாகரிகம்! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்கள் புகார் சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசி மாத திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் திருவிழா நிகழ்ச்சிகளின் போது ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். உயர்நீதிமன்றம் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும், அவற்றை மீறியதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். File Photo இந்த விவகாரம் தொடர்பாக, தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமிரெட்டிப்பட்டி கிராமம், கத்திமாறன் வளவு பகுதியில் அமைந்துள்ள குள்ள காளிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் ஆபாசப் பாடல்களுக்கு பெண்கள் நடனமாடியதாகவும், அதை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பார்த்ததாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இதன் போது ஒலிபெருக்கிகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுத்தேர்வு எழு...
கருத்துகள்