விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!

விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
News Image

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதை தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்,  தலைமையில் இன்று (15.07.2026) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக பராமரிப்பது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், போதை தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்த முக்கிய விவரங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:

சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு:

மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிப்பது தொடர்பாகப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு நிலவரம், பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணித்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு:

மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், காவல்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பிலும், சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் "Drug Free TN" செயலி:

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும், தமிழக அரசின் "Drug Free TN" மொபைல் செயலி (Mobile App) குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ள வேண்டும். இச்செயலியின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கூட்டு ஆய்வுகளும் சட்ட நடவடிக்கைகளும்:

காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் இணைந்து, தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்க கூட்டு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறி போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார்.

பங்கேற்ற அலுவலர்கள்:

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், திண்டிவனம் சார் ஆட்சியர்  .அ.ல.ஆகாஷ் உதவி ஆட்சியர் (பயிற்சி)  ரா.ஸ்ரீ ரஷத், இ.ஆ.ப., மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks