தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக இருக்காது என முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

விஜயின் அரசியலும், மாற்றமும்

தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆண்டு வந்தது. இவர்கள் வீழ்த்த பல கட்சிகள் தொடங்கப்பட்டாலும் அவையால் ஆட்சிக்கு வரக்கூடிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இவ்விரு கட்சிகளின் கூட்டணியில் இணைந்தது தான் மிச்சம். இப்படியான சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முதல் முறையாக களம் கண்டார்.

இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தவெக ஆட்சியமைத்ததோடு மட்டுமல்லாமல் விஜய் முதலமைச்சராகவும் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். விஜயின் வெற்றி சினிமாவில் அரசியல் கனவோடு இருக்கும் பலரையும் தட்டி எழுப்பியுள்ளது. அதன்படி தனுஷ், விஷால், ராகவா லாரன்ஸ் ஆகியோர் அரசியலுக்கு விரைவில் நுழைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் வந்தால் திமுக, அதிமுக காலி

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலிடம், அஜித்குமார், தனுஷ், சிலம்பரசன் டிஆர், சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோர் புகைப்படங்களைக் காட்டி இவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் திமுகவும், அதிமுகவும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்கள். நான் 2017ம் ஆண்டு அஜித்தை தொடர்புக் கொண்டு பேசினேன். ஜெயலலிதா இறந்த பிறகு அடுத்த தலைவருக்கான தகுதி அஜித் மற்றும் விஜயிடம் இருந்தது. எனினும் அஜித்துடன் இருந்தவர்கள் அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அதனால் அரசியலுக்கு வர மாட்டார் என தெரிவித்தார்கள்.

Also Read: TVK Ricky Rathan Pandit : முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமனம்.! யார் இவர் தெரியுமா.?

புகழ் உடையவர்களின் ஜாதகத்தில் சனியும், சுக்கிரனும் நன்றாக இருக்கும். இவர்கள் சினிமா அல்லது விளையாட்டுத்துறையில் நன்றாக ஜொலித்து மக்களை கவர்ந்து விடுவார்கள். அதே ஜாதகத்தில் செவ்வாய் சரியாக இருந்தால் அரசியலில் தொடர் வெற்றி, சூரியன் நன்றாக இருந்தால் எம்.எல்.ஏ., எம்.பி. ஆவார்கள். அப்படியான 2 அதிர்ஷ்டசாலி ஜாதகம் தான் விஜய் மற்றும் அஜித்துடையது.

நான் விஜயிடம் 2026ல் நீங்கள் தான் முதலமைச்சர் என சொன்னேன். இதனால் கடந்த ஓராண்டாக பலரால் அச்சுறுத்தப்பட்டேன். 2031 தேர்தலில் விஜயை ஜெயிக்க வேண்டும் என்றால் திமுக, அதிமுக இணைந்து வருவார்கள். ஒருவேளை தனுஷ் வந்தால் இந்த இரண்டு கட்சிகளும் இருக்காது.

தனுஷின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது. உதவி செய்வதற்கு மனது இருந்தால் போதும். அனுபவம், அறிவும் தேவையில்லை. அரசியலில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதற்கு தனுஷ் தயார் என்றால் 2031ம் ஆண்டு விஜய் vs தனுஷ் என்று தான் களம் மாறும்” என ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article