இன்று தலைநகர் டெல்லியையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது கரப்பான் பூச்சி கட்சியின் இளைஞர் படை. விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னர் மத்திய பாஜக அரசை மூச்சு முட்டி நிற்க வைத்திருக்கும் இந்த போராட்டத்தை தன்னெழுச்சியாக உருவாக்கியிருக்கிறார்கள் இளைய சமுதாயத்தினர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற இரண்டே இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

போராட்டம் நடத்தும் இளைஞர்களை காவல்துறையையும் மத்திய பாதுகாப்பு படையையும் வைத்து, மாநில அரசும் மத்திய அரசும் எப்படி அடக்கி, ஒடுக்க பார்க்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் அந்த போராட்டத்தை இன்னும், இன்னும் வீரியம் கொள்ள வைத்து வருகிறது. தன்னெழுச்சியான புரட்சியை வன்முறையை வைத்து தீர்த்துவிட முடியாது என்பதற்கு சான்றாக இளைய சமுதாயம் எதற்கும் தயார் என்று நெஞ்சுருதியோடு, தலை நிமிர்ந்து அங்கு போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலும் உருவான கரப்பான் பூச்சி கட்சி

இதனையடுத்து, தமிழ்நாட்டிலும் கரப்பான் பூச்சி கட்சியை சுயம்புவாக கட்டியெழுப்பியிருக்கின்றனர் இளைஞர்கள். அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக அவர்கள் ஒருங்கிணைந்து போராட்டமும் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரிய திராவிட கட்சிகளையெல்லாம் வீழ்த்திவிட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக இளைஞர்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்திருக்கும் இந்த சூழலில், கரப்பான் பூச்சி கட்சிக்கென தனி ஆதரவு பட்டாளமும் தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது. அந்த கட்சியில் தானாக முன்வந்து சேரும் ஒவ்வொரு இளைஞர்களின் கண்களிலும் இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சமும் தாகமும் வேட்கையும் இருப்பதை பார்க்க முடிகிறது.

கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி ?

இந்தியாவும் தமிழ்நாடும் எத்தனை எத்தனையோ கட்சிகளை பார்த்திருக்கிறது. ஒரு கட்சியை தொடங்குவதற்கு முன் அதற்கான பெயர் என்னவென்று முடிவு செய்ய பல மாதங்கள் கூட ஆகியிருக்கின்றன. ஆனால், ஒரே ஒரு நொடியில் ஒரு பெயரை குறிப்பிட்டு உருவானதுதான் கரப்பான்பூச்சி கட்சி. அதற்கு காரணமும் அரசியல்வாதிகள் அல்ல. நீதிமன்றம் அதுவும் உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் உச்சப்பட்ச அதிகார மையமாக இருக்கும் தற்போதைய தலைமை நீதிபதி சூர்யகாந்த் சொன்ன வார்த்தைகளில் சூடானதால் உருவானதுதான் கரப்பான் பூச்சி கட்சி.

சரி அவர் அப்படி என்ன சொன்னார் என்று பார்த்தால், ’கடந்த மே 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கில் கருத்துச் சொன்ன தலைமை நீதிபதி சூரியகாந்த், வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, வேலை இல்லாத இளைஞர்கள் சமூக ஊடகங்கள், பத்திரிகை துறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்தியாவின் சிஸ்டத்தை தாக்குகிறார்கள் என விமர்சித்து அவர்களை கராப்பான்பூச்சிகள்’ என்றும் காட்டாமாக கூறியிருந்தார்.

இந்தியாவில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது குறித்து கவலை தெரிவிக்க வேண்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டிய தலைமை நீதிபதி அதற்கு மாறாக அவர்களை கரப்பான் பூச்சிகள் என்று விமர்சித்தது கடும் எதிர்வினைகளை உருவாக்கியது.

காக்ரோச் கட்சியை உருவாக்கிய அபிஜித்

இந்நிலையில், இந்திய இளைஞர்களை கீழ்மைப்படுத்தியும் அவர்களை கரப்பான் பூச்சிகள் என்றும் தலைமை நீதிபதி விமர்சித்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு 30 வயதே ஆன இதழியல் படித்த இளைஞரான அபிஜித், அந்த கோபத்திலேயே சமூக வலைதள பக்கத்தில் தொடங்கியதுதான் இந்த கரப்பான் பூச்சி கட்சி.

இன்று அந்த ஒன்றுக்கும் உதவாத இளைஞர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்கள்தான் இந்தியாவின் அரசாங்கத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறார்கள். அவர்கள் கையிலெடுத்துள்ள முதல் பிரச்னையே நீட் தேர்வுதான். முதல் பிரச்னையே தலைநகரான டெல்லியை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களிலும் அந்த போராட்டம் பரவத் தொடங்கியிருக்கிறது.

View this post on Instagram

A post shared by Cockroach Janta Party Tamilnadu (@cockroachjantaparty.tnofficial)

தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டே நீட் தேர்வுக்கு எதிரான வழிகாட்டு!

ஜல்லிக்கட்டு நடத்த தன்னெழுச்சியாக தமிழ்நாட்டு இளைஞர்கள் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றில் இல்லாத நிகழ்வு. அது இந்தியாவே திரும்பி பார்த்து வியந்தது. அது மட்டுமின்றி மற்ற மாநில இளைஞர்களும் ஆதரவு கரம் நீட்டி, அங்கேயே போராட்டங்களை முன்னெடுத்தனர். நமது ஜல்லிக்கட்டு போராட்டம்தான் இந்த கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்களுக்கான உத்வேகம். இன்று அவர்கள் தன்னெழுச்சியாக நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நீட்சிதான். ஏற்கனவே தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கும் நிலையில், டெல்லியில் நடைபெறும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் தமிழ்நாட்டிலும் நீளத் தொடங்கியிருக்கிறது

இளைஞர்கள் கரப்பான் பூச்சி மாதிரியானவர்கள்தான். உலகமே அழிந்தாலும் அவர்களின் சக்தி ஒருபோதும் அழியாது.!

Source: Read Full Article