CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
News Image

CM Vijay:  தமிழ்நாட்டின் வரலாற்றின் முக்கிய தினங்களான  ஜுலை 18 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு தேதிகளையும் தவெக தலைமையிலான அரசு கொண்டாடும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வாழ்த்து

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு

மேலும், “மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்” என முதலமைச்சர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு நாள் எது?

கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு புதிய சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் கர்நாடகா, கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் நவம்பர் ஒன்றாம் தேதியைத் தான் முறையே மாநில நாட்களாக கொண்டாடி வருகின்றன. தமிழ்நாடும் இதே நிலையை பின்பற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் எழுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், 2021 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுய்ப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். என்று அறிவித்தார்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை

திமுகவின் முடிவை மாற்றிய சிஎம் விஜய்

1967 ஆம் ஆண்டில் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அதே ஆண்டில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கான தீர்மானம் அந்த ஆண்டின் ஜூலை 18 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி தான் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. வராலாற்றில் இடம்பெறுவதற்காக திமுக அபத்தமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது என அன்புமணி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, நவம்பர் 1ம் தேதியை மாநில தினமாக அறிவிக்க வலியுறுத்தினர். இந்நிலையில் தான், ஜுலை 18 மற்றும் நவமபர் 1 ஆகிய இரண்டு தேதிகளும் அரசால் கொண்டாடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks