தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி நடந்து வருகிறது. முதன்முறையாக ஆட்சி அமைத்த தவெக ஆட்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெக ஆட்சி அமைவதற்கு சமூக வலைதளங்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவர் ஆட்சி அமைந்த பிறகு ஆங்காங்கே உள்ள குறைகளை சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு:

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் திடீரென பல இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இன்று திடீரென முதலமைச்சர் சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூகநீதித்துறை மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் விஜய் மாணவர்கள் விடுதிக்கு சென்றார். அப்போது, மாணவர் விடுதிக்குள் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்யிடம், அங்கே இருந்த மாணவர் ஒருவர் விடுதியில் உள்ள பல பிரச்சினைகளை விளக்கமாக எடுத்துக்கூறினார்.

The Way He Patiently Listens to Every Student Wants & Need,Real-Life MASTER. 🥹❤️ @TVKVijayHQ

pic.twitter.com/LtiddnrxlQ

— TD....❥ (@MiniiGirl__) July 17, 2026

அமைதியாக கேட்ட விஜய்:

சார் ஒரு 5 நிமிடம் என்று அந்த மாணவன் முதலமைச்சர் விஜய்யை அழைக்கவும், அந்த மாணவனது கோரிக்கையை ஏற்று நின்ற முதலமைச்சர் விஜய்யும், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசும் அந்த மாணவர் கோரிய விடுதியில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் கை கட்டி கேட்டறிந்தார்.

பின்னர், அங்கே விடுதியின் காப்பாளரையும் வரவழைத்து மாணவர்களின் குற்றச்சாட்டிற்கு அவரது பதில் என்னவென்றும் கேட்டறிந்தார். பின்னர், அனைத்தையும் குறித்துக்கொள்ளுமாறு காப்பாளருக்கு அறிவுறுத்தினார். பின்னர், முதலமைச்சர் விஜய் விடுதியில் உள்ள அறைகள், சமையற்கூடம், கழிப்பறைகளுக்கு நேரில் சென்று அதை ஆய்வு செய்தார்.

வைரலாகும் வீடியோ:

விஜய் மாணவர்களின் கோரிக்கையை அமைதியாக கைகட்டி கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலமைச்சர் விஜய் இதுபோன்று திடீர் ஆய்வு செய்து வருவதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசும்போது முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆய்வு தொடரும் என்றும், கள நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ள அவர் விரும்புவதாகவும், இதனால் அமைச்சர்களாகிய தாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என்று அவர் முதலமைச்சர் விஜய்யை பாராட்டினார்.

Source: Read Full Article