CM Vijay Karur Visit Schedule: கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு முதலமைச்சர் விஜய் கரூர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

முதலமைச்சர் விஜய் கரூர் பயணம்:

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கி எடுத்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த பகுதியிலேயே சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் செல்கிறார். 30-க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். அப்படி விஜய் இன்று மேற்கொள்ளும் பயணம் எங்கு தொடங்கி எங்கு முடிவடையும் என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் கரூர் பயண திட்டம்

காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து முதலமைச்சர் விஜய் விமான நிலையத்திற்கு புறப்படுகிறார்

காலை 9.20 மணியளவில் மீனம்பாக்கத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சி நோக்கி பயணிக்கிறார்

காலை 10.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குகிறார்

காலை 10.40-க்கும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கரூரில் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்கிறார்

நண்பகல் 12.15 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும்

தொடர்ந்து அரசு இல்லத்தில் சிறிது நேரம் முதலமைச்சர் ஓய்வெடுத்து மதிய உணவை எடுத்துக்கொள்வார்

சுமார் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரவுள்ளார்

அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பது, நலத்திட்டங்களை வழங்குவது தொடர்பான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி முடிந்ததும் சாலை மார்க்கமாகவே கரூரிலிருந்து திருச்சி விமான நிலையத்தை நோகி சுமார் 4.10 மணியளவில் புறப்படுவார்

மாலை 6 மணிக்கு தனிவிமான மூலம் சென்னைக்கு திரும்பும் பயணத்தை தொடங்குவார்

மாலை 7 மணிக்கு சென்னைக்கு திரும்பும் முதலமைச்சர் விஜய், 7.45 மணிக்கெல்லாம் மீண்டும் தனது நீலாங்கரை வீட்டை அடைந்து கரூர் பயணத்தை முடிவு செய்கிறார்.

எதிர்பார்ப்பும்..எதிர்ப்பும்..!

பல்வேறு காரணங்களால் நடந்ததாக கூறப்படும் அந்த நிகழ்வு அரங்கேறி, சுமார் 10 மாதங்களுக்குப் பிறகும், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையகாவும் விஜயின் இன்றைய கரூர் பயணம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும், அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை

அரசியல் முக்கியத்துவம்:

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்வாக பணிகளிலேயே முதலமைச்சர் விஜய் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியல் ரீதியாக குறைவாகவே கவனம் செலுத்துகிறார். தேர்தலுக்குப் பிறகு சென்னையை தாண்டி திருச்சியை தவிர எந்தவொரு மாவட்டத்திற்கும் அவர் பயணம் கூட மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், அவரது இன்றைய கரூர் பயணம், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு அவர் என்ன பேசப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article