Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!

Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
News Image

கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது என அம்மாநில  நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பூதாகரமாக வெடித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து பதிவு வெளியிட்டார். அதில், “கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்றும், நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறினார்.

Mr @Udhaystalin,

I have not made any kind of statement that Karnataka would not release water to Tamil Nadu.

Karnataka’s inability to release water is dictated by negligible flows into Four Karnataka reservoirs namely KRS, Kabini, Harangi and Hemavathy and insufficient…
— Ramalinga Reddy (@RLR_BTM) July 9, 2026

பதிலடி கொடுத்த ராமலிங்க ரெட்டி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடகா அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “உதயநிதி அவர்களே, கர்நாடகா தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடாது என்று நான் எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை. கே.ஆர்.எஸ், கபினி, ஹரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய நான்கு கர்நாடக நீர்த்தேக்கங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான நீர்வரத்து இருப்பதாலும், இந்த நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு இல்லாததாலும் கர்நாடகாவால் தண்ணீரைத் திறந்துவிட முடியவில்லை.

காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (CWRC) பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடக நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து முடிவெடுப்பதற்கான தகுதிவாய்ந்த அமைப்பு காவேரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகும். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.

ஜூன் 30, 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் நான்கு நீர்த்தேக்கங்களில் உள்ள மொத்த நீர் இருப்பு (MDDL) 15.761 டி.எம்.சி ஆகும். இது அடுத்த மூன்று மாதங்களுக்கு மாநிலத்தின் குடிநீர் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. 30.06.2026 அன்று நடைபெற்ற மத்திய நீர் ஒழுங்குமுறைக் குழுவின்  கூட்டம் வரை, நான்கு நீர்த்தேக்கங்களுக்குமான மொத்த நீர்வரத்து 4.05 டிஎம்சி (பிலிகுண்டலு 2.915 டிஎம்சி) ஆக இருந்தது.

பெங்களூரு பெருநகரப் பகுதி, மைசூரு, மாண்டியா, சாமராஜநகர், ராமநகர் மற்றும் பிற நகரங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நான்கு நீர்த்தேக்கங்களிலும் உள்ள நீர் இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று கர்நாடகா, 16.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மத்திய நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டங்களிலும், 23.06.2026 அன்று நடைபெற்ற மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகா தெரிவித்த கருத்துக்களை மத்திய நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஒழுங்குமுறைக் குழு பரிசீலித்து, சில முடிவுகளை அறிவித்தன. அதன்படி தற்போதைய நிலையில் காவிரிப் படுகையில் நிலவும் மோசமான சூழ்நிலையையும், அது ஒரு பற்றாக்குறைப் படுகையாக இருப்பதையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், தமக்கென ஒதுக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் உள்ள பற்றாக்குறையான நீர் வளங்களை மிகவும் விவேகமான முறையில் பயன்படுத்தி, இயன்றவரை நீரைச் சேமிக்க வேண்டும்.  குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.

Also Read: CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?

மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து, எல்-நினோ நிகழ்வு தொடங்கியுள்ளதால் பருவமழை தாமதமாகவும், மழைப்பொழிவு பற்றாக்குறையாகவும் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு நாளிதழ்களில் வெளியிட்டு வருகிறது. வரும் நாட்களில் தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு நீர்த்தேக்கங்களில் போதுமான நீர்வரத்து கிடைக்கும் என்று நம்புகிறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இல்லாததை உதயநிதி சொன்னதற்கு கர்நாடகா அமைச்சரே பதில் கொடுத்து விட்டார். இதெல்லாம் தேவை தானா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks