சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(07.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 7-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்ஹில்ஸ்

புதுநகர் 3-வது மற்றும் 5-வது தெரு

நாரவாரிக்குப்பம்

தர்காஸ் ரோடு

கோமதியம்மன் நகர்

ஜே.ஜே நகர்

தீர்த்தகரையாம்பட்டு

பாலவிநாயகர் நகர்

விவேக் அக்பர் அவென்யூ

பாடியநல்லூர்

ஆர்.ஜே.என். காலனி

கும்மனூர்

ஜெயதுர்கா நகர்

பாலவயல்

மணீஷ் நகர்

கண்ணபாளையம்

சென்ட்ரம்பாக்கம்

சிரங்காவூர்

பேருங்காவூர்

புது நகர்

பாலாஜி கார்டன்

ஆரூன் உல்சா சிட்டி

பைபாஸ் ரோடு

சோத்துப்பாக்கம் சாலை

நியூ ஸ்டார் சிட்டி

கள்ளிக்குப்பம்

அழிஞ்சிவாக்கம்

வடகை

மகாராஜா நகர்

எம்.எச் ரோடு

வினேஷ் நகர்

திருவிகா நகர்

டி.என்.கே நகர்

அன்பு நகர்

விளாங்காடுபாக்கம்

மல்லிமா நகர்

டி.எச். ஹை ரோடு

ஆலமரம்

காந்தி நகர்

ஆசை தம்பி தெரு

திருவான்மியூர்

சாஸ்திரி நகர் கிழக்கு

வடக்கு மற்றும் தெற்கு மாட வீதி

பாரதிதாசன் தெரு

இசிஆர் (ECR)

லலிதா கார்டன்

குப்பம் கடற்கரை சாலை

மேற்கு தொட்டி தெரு

சன்னதி தெரு

மேட்டு தெரு

<iframe title="Annamalai on TR Balu | CASE-ஐ வாபஸ் வாங்கிய TR பாலு! உண்மையை உடைத்த அண்ணாமலை! நடந்தது என்ன?" src="https://www.youtube.com/embed/B0GPi92UuNs" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

தாம்பரம்

கடப்பேரி மெப்ஸ் ஏரியா

மௌலானா நகர்

சிங்காரவேலன் தெரு

திருநீர்மலை மெயின் ரோடு

ரங்கநாதபுரம் காதர் பாய் தெரு

கண்ணன் தெரு

ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி

ரமேஷ் நகர்

ஆர்.வி. கார்டன்

துரைசாமி பிள்ளை தெரு

எம்.ஆர். தியேட்டர்

முடிச்சூர் சர்வீஸ் சாலை

மார்க்கெட் ஏரியா

கார்ப்பரேஷன் அலுவலகம்

ஜட்ஜ் காலனி

காமகோடி நகர்

ஸ்ரீராம் நகர்

எம்.எம்.ஆர் தெரு

காந்தி சாலை

வள்ளுவர் குருகுலம்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article