Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
News Image

தற்போதைய சூழலில் காவிரி படுகையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உறுதியாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், ’’தமிழ்நாடு முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழலில் காவிரி படுகையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் எங்கள் சட்டக் குழு ஈடுபட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ‘’பாசன விவகாரம் தொடர்பாக நேற்று அவர்கள் சிறிதளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதுபற்றி எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

இதற்கு முன்பும் அவர்கள் எங்கள் கோரிக்கையை இரண்டு முறை நிராகரித்திருந்தனர். எனவே, அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட நமது அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து நான் பேசினேன்.

நாங்கள் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்து வருகிறோம். அதன் பிறகு, நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். அது முடிந்ததும், நான் பெங்களூரு சென்ற பிறகு, எதிர்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவேன்.

தமிழக அரசு விருப்பம்

இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் வந்து பேச வேண்டும் என்ற விருப்பத்தை தமிழக அரசும் வெளிப்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். சிஎம் விஜய் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்கு உரியதைக் கொடுப்பதும் நமது கடமையாகும். நான் அவர்களிடம், 'சரி, வாருங்கள்' என்று கூறியுள்ளேன். அதனுடன், நமது மாநிலத்தின் காவிரிப் படுகைப் பகுதி தொடர்பாகவும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன். அதை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளேன்’’ என்றும் முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

இது தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழக விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நதிநீர் விவகாரம் தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks