பாரிஸையே வியக்க வைத்த புதுச்சேரி போலீஸ்: சீருடையில் ஜொலிக்கப் போகும் ஜனாதிபதியின் 'பிரசிடென்ட்ஸ் கலர்' மகுடம்!

பாரிஸையே வியக்க வைத்த புதுச்சேரி போலீஸ்: சீருடையில் ஜொலிக்கப் போகும் ஜனாதிபதியின் 'பிரசிடென்ட்ஸ் கலர்' மகுடம்!
News Image

புதுச்சேரி : புதுச்சேரி வீதிகளில் கம்பீரமாக வலம் வரும் போலீசாரின் பெருமையை மேலும் உயர்த்தும் விதமாக, புதுச்சேரி காவல் துறைக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ஜனாதிபதியின் 'பிரசிடென்ட்ஸ் கலர்' விருது (President's Colour Award) வழங்கப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரி வரவிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விருதை அதிகாரப்பூர்வமாக வழங்க உள்ளார்.

இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்த பிறகு, புதுச்சேரி காவல் துறையின் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண போலீசார் வரை அனைவரது சீருடையின் இடது கை சட்டையிலும், ஜனாதிபதியின் வண்ணம் பொறிக்கப்பட்ட பிரத்யேக 'பேட்ச்' (Badge) கம்பீரமாக இடம்பெறும். அத்துடன், புதுச்சேரி காவல் துறைக்கென பிரத்யேக சின்னம் மற்றும் வரலாற்றுச் சாதனைகள் பொறிக்கப்பட்ட புதிய வண்ணக் கொடியும் ஜனாதிபதியால் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் நடைபெறும் காவல் துறை அணிவகுப்புகளில் இந்த கொடி முன்னால் பறந்து செல்லும்.

பிரெஞ்சு பாரம்பரியமும் பழங்கால காவல் அமைப்பும்:

புதுச்சேரி காவல் துறையின் வரலாறு என்பது வெறும் சட்டத்தினால் உருவானது மட்டுமல்ல; அது பிரெஞ்சு பாரம்பரியமும், உள்ளூர் மண்ணின் கலாசாரமும் கலந்த சுவாரசியமான பின்னணியைக் கொண்டது. பிரெஞ்சு ஆட்சிக்கு முன்பே புதுச்சேரியில் வலுவான உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் இங்கு வந்தபோது, அந்த பழைய கட்டமைப்பைக் கலைக்காமல் தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டனர்.

சட்டம் ஒழுங்கின் காவலர்கள்: அக்காலத்தில் புதுச்சேரியில் 'நைனார்கள்' என்றும், காரைக்காலில் 'விசியதார்கள்' என்றும் அழைக்கப்பட்டவர்களே சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தனர். நவாப்புகள் வரும்போது வரவேற்பு அளிப்பது முதல் அவர்களுக்குப் பாதுகாப்பு தருவது வரை இவர்களே முன்னின்றனர். தவறு செய்தால் பதவியைப் பறிக்கும் அளவுக்கு நேர்மையான நிர்வாகம் அப்போது நடைமுறையில் இருந்தது.

காவலர்களுக்கான நிதி: அந்தக் காலத்தில் போலீசாரின் சம்பளத்திற்காகத் தனி பட்ஜெட் எதுவும் இல்லை. கடல் மற்றும் தரை வழியாக வரும் வணிகப் பொருட்களுக்கு வரி வசூலித்து, அதில் ஒரு பகுதி போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 1768 மார்ச் 20 அன்று பருத்தி, துணி, நெய், எண்ணெய் போன்ற பொருட்கள் மீது ஒரு சதவீத வரி விதிக்கப்பட்டது.

துய்ப் பிளேயின் சீர்திருத்தங்கள்: கவர்னர் துய்ப் பிளேயின் காலத்தில் இரவு நேர ரோந்துப் பணிக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. சிற்றூர் பாதுகாப்பிற்காகச் 'செப்பியான்', 'பியான்ஸ்' என காவலர்கள் பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிரி நாட்டு ராணுவத்திலிருந்து தப்பி ஓடி வருபவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

பாரிஸையே வியக்க வைத்த பாதுகாப்பு: பிரவேட் இண்டியன் தலைமையிலான 'மெர்சாஸ்' என்ற தனி காவல் அமைப்பு, இரவு நேரங்களில் திருட்டு மற்றும் கொலைகளை மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தியது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் மாநகரில் கூட மக்கள் இவ்வளவு பாதுகாப்பாக நடமாட முடியாது என்று பாராட்டும் அளவுக்கு இந்த அமைப்பின் செயல்பாடு பிரசித்தி பெற்று விளங்கியது.

காரைக்காலின் தனித்துவம்: காரைக்கால் பகுதியில் குறுநிலக்கிழார்களான விசியதார்கள் திருடர்களைக் கண்டுபிடிப்பதில் வல்லுநர்களாக இருந்தனர். தொடர்ந்து, 1769-ல் 'லெப்டினன்ட் தி போலீஸ்' என்ற காவல் துறையின் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, அவர் சட்டம் ஒழுங்குடன் சேர்த்து சில பகுதிகளில் நீதி வழங்கும் பணியையும் கவனித்து வந்தார்.

இந்திய காவல் துறையாகப் பரிணாம வளர்ச்சி:

இந்த நீண்ட பிரெஞ்சு காவல் நிர்வாக முறை 1963 செப்டம்பர் 30 வரை நீடித்தது. அதன்பின், அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) அமலுக்கு வந்தது. அந்த நாளே புதுச்சேரி போலீஸ் துறையின் 'உதய நாள்' ஆகக் கருதப்படுகிறது.

தன்னுடைய பாரம்பரியத்தின் வேர்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, இன்று நவீன குற்றப் புலனாய்வில் உச்சம் தொட்டு, 'பிரசிடென்ட்ஸ் கலர்' விருது வரை உயர்ந்து நிற்கும் புதுச்சேரி காவல் துறைக்கு இந்த வரலாற்றுப் பின்னணி பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks