பள்ளிக்கரணை ஆக்கிரமிப்பு: முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிக்கரணை ஆக்கிரமிப்பு: முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
News Image

சென்னை : பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் கடைவீதியில் பசுமை தாயகம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பாண்டிபஜாரில் உள்ள கடைகள் ஒவ்வொன்றாக சென்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்களுக்கு சதுப்பு நில பாதுகாப்பு அவசியம் குறித்த நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

'தென் சென்னை வறண்டுவிடும் அபாயம்' – சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ

இன்றைக்கு இது முக்கியத்துவம் பெற காரணம் தண்ணீர் பிரச்சனைதான். சென்னை மிகப்பெரிய நகரம். ஒரு கோடி பேர் இன்றைக்கு இங்கு இருக்கிறார்கள். கூவம் ஆற்று தண்ணீரை குடிக்க முடியாது. 3 ஆறுகள் இருந்தும் சென்னைக்கு தண்ணீர் கிடையாது. சென்னையில் ஏரி குளம் கிடையாது. ஏரி குளம் இருந்த இடங்களில் அரசே குடியிருப்பை கட்டி விட்டார்கள். எனவே சதுப்பு நிலம்தான் மழைநீரை உறிஞ்சும் ஸ்பான்சு. சதுப்பு நிலம் இருந்தால் தான் நிலத்தடி நீர் இருக்கும். குழாயை திறந்தால் தண்ணீர் வர வேண்டும் என்றால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் தென் சென்னையே வறண்டு விடும். சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டும். நல்ல தண்ணீரை விட்டு விட்டு உப்பு நீரை நன்னீராக்கி குடிக்கிறோம். அதற்கு எவ்வளவு செலவு ஆகும். கழிவு நீரையும் சுத்தம் செய்து பயன்படுத்தும் அவலநிலை வரவேண்டாம். சதுப்பு நிலத்தை காப்பாற்றினால்தான் தண்ணீர் கிடைக்கும்.

'வெள்ளத்தைத் தடுக்க சதுப்பு நிலமே தீர்வு' – அன்புமணி ராமதாஸ்

சென்னையில் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பசுமை தாயகத்தின் சர்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
சென்னைக்கு 4 வரங்களை இயற்கை கொடுத்துள்ளது. அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 3 ஆறும் சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருகிறது. அந்த 4 வது வரம் அந்த நீரை தேக்கி வைக்கிறது.

சென்னையின் வடிகால் பள்ளிக்கரணை 100 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 15 ஆயிரம் ஏக்கர் இருந்தது. அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் செய்து... பின்னர் விடுகளாக வந்துவிட்டது. தற்போது 15 ஆயிரம் ஏக்கரில் இருந்து 2500 ஏக்கருக்கு வந்துவிட்டது. அதையும் அழிக்க கிரடாய் போன்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள் சூழ்ச்சி செய்து வருகிறது. வேடந்தாங்கள் விட 4 மடங்கு அதிக பறவை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருகிறது. அதை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள். சென்னை IT CITY என்றால் அது OMR அதை கட்டி இருப்பது சதுப்பு நிலம் தான். இன்னும் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்று இருக்கிறார்கள்.

நாம் அதற்கு விடக்கூடாது. அது உங்கள் பிள்ளைகள், வருங்கால சந்ததிகள் சென்னையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். 2015 யில் தற்போது நான் நிற்கும் இதே தெருவில் நான் பரிசலில் சென்றேன். காரணம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழைத்ததால் தண்ணீர் அங்கு செல்ல முடியவில்லை. *சென்னைக்கு வெள்ளம் வரக்கூடாது என்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். வேளச்சேரி மொத்தமும் சதுப்பு நிலம். அதனால்தான் மழை காலங்களில் பாலங்களில் வாகனம் நிறுத்தும் நிலை உள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களால் நொந்து போய்விட்டோம். தமிழகத்தில் உள்ள 26,800 ஈர நிலத்தை ( wet land) மறு அறிவிக்கை செய்ய வேண்டும்..

தமிழகத்தில் உள்ள wet land committee தூங்கி கொண்டுள்ளது.கடந்த ஆட்சியில் சேகர்பாபுதான் CMDA incharge. அவரை விட எக்ஸ்பர்ட் யாரும் இல்லை. (சேகர்பாபுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்) இப்படி போன்ற அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்தால் சென்னை இன்னும் நாசமாகதான் போகும். சதுப்பு நிலம் இல்லை என்றால் அடையாறு இந்திராநகர் அண்ணா நகர் டி நகர் எல்லாம் close (செய்கை செய்து காட்டினார்) தற்போதைக்கு Tvk அரசு இருக்கிறது. மக்கள் தீர்ப்பை கொடுத்து இருக்கிறார்கள். முதலமைச்சர் விஜய் நேரடியாக இதில் தலையிட்டு சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும்.

சதுப்பு நிலத்தை வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும். 5 ஆயிரம் டன் குப்பைகள் சதுப்பு நிலத்தில் கொட்டி எரிக்கிறார்கள். அங்கு இருக்கும் மக்களை கட்டுமான நிறுவனம் தூண்டி விடுகிறார்கள். பட்டா இல்லை நாங்கள் நடுத்தர குடும்பம் என்று பேச வைத்து சூழ்ச்சி செய்கிறார்கள். இதுல் போராட்டம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சதுப்பு நிலத்தை வரையறை செய்து அறிவித்தால் அதை ஆக்கிரமிக்க முடியாது. இதை தமிழக அரசு முதல் கட்டமாக செய்ய வேண்டும். அதனால் அமைதியாக கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். இல்லை என்றால் அடுத்த கட்டமாக நடவடிக்கை மேற்கொள்வோம்.

பெறப்படும் கையெழுத்துகளை முதலமைச்சரிடமும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் எடுத்து செல்வோம் நமது சட்டமன்ற உறுப்பினர் பேரவையில் வலிமையாக இது குறித்து பேசுவார், கடந்த ஆட்சியில் பிரிக்கேஜ் நிறுவனத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு CMDA அனுமதி கொடுத்தது. அப்போதைய தலைவர் விஞ்ஞானி சேகர்பாபு அனுமதி கொடுத்தார்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks