குளியறையில் செல்போன் வீடியோ

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவி தன்னுடைய வீட்டின் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீர்னு பாத்ரூமின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவருக்கு இடையே இருந்த சின்ன இடைவெளியில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை கவனித்தார். உற்று பார்த்த போது அங்கே ஒரு செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்டு வீடியோ ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகி விட்டார்.

கூச்சலிட்ட மாணவி - தப்பி ஓட முயற்சி

பயந்து போன அந்த மாணவி , சத்தம் போட்டு கூச்சல் போட்டுள்ளார். பாத்ரூமிலிருந்து பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டதுமே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள். அதற்குள் செல்போனை மறைத்து வைத்திருந்த நபர் அங்கிருந்து எகிறி தப்பியோட முயன்றார். அதற்குள் பொது மக்கள் நாலாபக்கமும் சுற்றி வளைத்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

பொதுமக்களிடம் சிக்கிய அந்த நபரை செம்மஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பிறகு அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் மேற்கொண்டனர். அப்போது தான் அந்த நபரின் பெயர் தமிழ்மாறன் என்பதும், 23 வயதுடைய அவர், ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article