விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!

விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
News Image

விழுப்புரம் : பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் 2026-27 பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது நிலவும் எல்நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால். குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில், வாழை மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை 25/06/2026 முதல் விவசாயிகள் தேசிய பயிர்க்காப்பிட்டு இணையதளத்தில் காப்பீடு செய்துகொள்ளலாம். வாழப்பயிர் ஒரு ஏக்கருக்கான காப்பீட்டு தொகை ரூ. 58.000/- மற்றும் மரவள்ளி ப்பயிர் ஒரு ஏக்குக்கான காப்பிட்டு தொகை ரூ.31,300/- ஆகும். இதற்கு விவசாய பெருமக்கள் ஒரு ஏக்கருக்கான பிரிமியம் தொகையினை வாழை பயிர்க்கு ரூ.725/- மற்றும் மரவள்ளி பயிர்க்கு ரூ. 507/- செலுத்தி பயனடையலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாழை பயிருக்கு கண்டமங்கலம் வட்டாரத்தில் கண்டமங்கலம் மற்றும் சித்தவம்பட்டு பிரிக்காவிலும், திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் திருவெண்ணெய்நல்லூர் பிர்க்காவிலும். முகையூர் வட்டாரத்தில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அரகண்டநல்லூர் பிகாவிலும், கோலியனூர் வட்டாரத்தில் விழுப்புரம் பிர்காவிலும், காணை வட்டரத்தில் காணை பிர்க்காவிலும். விக்கிரவாண்டி வட்டாரத்தில் விக்கிரவாண்டி பிர்க்காவிலுள்ள கிராமங்கள் மட்டும் தகுதியுடையவையாகும். மரவள்ளி பயிருக்கு கண்டமங்கலம் வட்டராத்தில் கண்டமங்கலம் மற்றும் சித்தலம்பட்டு பிரிக்காவிலும், வானூர் வட்டாரத்தில் வானூர் நெமிலி மற்றும் உப்பு வேலூர் பிர்காவிலுள்ள கிராமங்கள் மட்டுமே காப்பிட்டு செய்ய தகுதியுடையவையாகும். வாழை மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.09.2026 ஆகும். இத்திட்டத்தின் கீழ். மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை. விதைப்பு / நடவு பொய்த்தல். பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இட நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை தேசிய பயிர்க்காப்பீட்டு இணையதளத்தில் மையங்கள் (https://pmfby.gov.in/re" που செய்துகொள்ளலாம். காப்பிடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன். பதிவுளிண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை கணக்கு புத்தகத்தின் (Bank pass bock) முதல் பக்கநகல், ஆதார் அட்டை (Andhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக்கொண்டு அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம் / குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ, அல்லது தோட்டக்கலை அலுவலரையோ, அல்லது உதவி தோட்டக்கலை அலுவவரையோ வங்கிகிளைகளையோ அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகளின் நவனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இப்பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks