சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்க !! தமிழக, கேரள அரசுகளுக்கு ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை

சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்க !! தமிழக, கேரள அரசுகளுக்கு ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை
News Image

பக்தர்களுக்கான அடிப்படை வசதி

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் போது பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கேரள அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் தேசிய தலைவர் முருகன். ஆர். செல்வன் குழுவினர் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து தான் ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள்.

சபரிமலை கோயிலில் 1 நாளைக்கு 70 ஆயிரம் பேர் தான் சராசரியாக சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்கின்றனர். அங்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசும் , சபரிமலை தேவசம்போர்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு கோரிக்கை

1. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைமையகத்தில் இருந்தும் சபரிமலை பம்பை வரை சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்.

2. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மலையாளம் மொழி தெரியாமல் கஷ்டப்பட கூடாது என்பதற்காக அந்தந்த மாநிலங்களின் சார்பில் உதவி மையம் ( Help Center) தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா அமைக்க வேண்டும்.

3. மாற்று திறனாளிகள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யவும், காசி திட்டம் போன்று சபரிமலைக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த பக்தர்களில் இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்லவும் புதிய திட்டத்தை மாநில அரசு கொண்டு வர வேண்டும். மேலும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் பிரத்தியேக வரிசை அமைக்க வேண்டும்.

4. காணிக்கை பணம், தங்கம் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகை திருட்டு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

5. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 400 கோடி வருமானம் வருகிறது. ஆனால் 5 சதவீதம் பணம் மட்டும் செலவிடப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் கூட்டம் காரணமாக சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யலாம் திரும்பிய வரலாறும் உண்டு.

6. சபரிமலை கூட்டத்தை கேரள காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா மாநில காவல் துறையையும் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

7. சபரிமலையில் உதவி மையம் அமைக்க 4 மாநில ( தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா) அரசாங்கத்தை சந்தித்து பேச உள்ளதாகவும், காசிக்கு வழங்குவது போல சபரிமலைக்கும் தமிழக அரசு சலுகை வழங்க வேண்டும்.

8. ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 10 மணி நேரம் நின்று தரிசனம் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தண்ணீர், அன்னதானம், சுத்தமான கழிப்பறை போன்ற எந்த வசதியும் செய்து தருவதில்லை. கடந்த அரசு எந்த வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.

9. ஐயப்ப பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கவும், பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கவும்
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தயாராக இருக்குறது. ஆனால் கேரள அரசு அதற்கு அனுமதி வழங்காமல், அதிக தொகை கொடுத்து பயணிக்க வைக்கின்றனர். இதையெல்லாம் இப்போது வந்துள்ள கேரள அரசு முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks