தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகி நந்தகுமாருக்கு 50 கோடி இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருச்சி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி

எதற்கு வக்கீல் நோட்டீஸ்?

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு லஞ்சம் பெற்றதாக நந்தகுமார் குற்றஞ்சாட்டி இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் நேர்காணல்கள் கொடுத்திருந்தார். இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் தன்னுடைய நற்பெயருக்கு திட்டமிட்டு அவதூறாக களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி நந்தகுமாருக்கு திமுக எம்.பியும் வழக்கறிஞருமான வில்சன் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் அன்பில் மகேஸ்.

அதில், நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தன்னை பற்றி அவதூறாக ஊடகங்களில் கொடுக்கப்பட்ட பேட்டிகளை நீக்க வேண்டும் என்றும் அதோடு 50 கோடி ரூபாய் இழப்பீடாய் வழங்க வேண்டும் என்றும் நந்தகுமாருக்கு அந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சட்டரீதியாக சந்திக்கும் அன்பில்

தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திக்க அன்பில் மகேஸ் முடிவு செய்து தன்னுடைய வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அரசு பள்ளிகளை மறுசீரமைப்பு செய்து தரம் உயர்த்திய தன்னுடைய கட்சிக் காரர் அன்பில் மகேஸ் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவரது நற்பெயரை கெடுக்க முயற்சித்துள்ளதாகவும் வில்சன் தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடுக்க முடிவு

நோட்டீஸ்க்கு 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கவில்லையென்றால் நந்தகுமார் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article