காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையா? சுட்டெரிக்கும் வெயிலா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையா? சுட்டெரிக்கும் வெயிலா? வானிலை ஆய்வு மையம் தகவல்!
News Image

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பநிலை நிலவரங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்றுடன் மிதமான மழை

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மழை பெய்யும் சமயங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் நிலவும் இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் நாளை இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

மழை எச்சரிக்கைக்கு இடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட வானிலை (ஜூலை 29)

காஞ்சிபுரம் மட்டும் செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஜூலை 29 அன்று மேகமூட்டமான வானிலையுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°C ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆகவும் பதிவாகக்கூடும். பகல் நேரத்தில் 55% மற்றும் இரவு நேரத்தில் 65% வரை மழை பொழிய வாய்ப்புள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks