தஞ்சாவூர்: 10, 12-ம் வகுப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்... E-பெட்டகம் மூலம் சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்! எப்படி? என்ன என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாமா?

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ உள்ளிட்ட முக்கிய கல்விச் சான்றிதழ்கள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, அவற்றை மீண்டும் பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு அரசின் E-பெட்டகம் (e-Pettagam) இணையதளம் மூலம் அரசு வழங்கிய பல்வேறு சான்றிதழ்களை மின்னணு சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் ஓடிபி சரிபார்ப்பு

E-பெட்டகம் இணையதளத்தில் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓடிபி சரிபார்ப்பு மூலம் உள்நுழையலாம். அதன் பிறகு தங்களது பெயரில் கிடைக்கும் மின்னணு சான்றிதழ்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

எந்தெந்த சான்றிதழ்கள் கிடைக்கும்?

தற்போது E-பெட்டகம் தளத்தில், துறைகள் இணைத்துள்ள மின்னணு ஆவணங்களைப் பொறுத்து கீழ்க்கண்ட சான்றிதழ்களைப் பெற முடியும்.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
டிப்ளமோ சான்றிதழ்
பிறப்புச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
மற்றும் பல அரசு மின்னணு சான்றிதழ்கள்

முக்கிய நிபந்தனைகள்

அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, தற்போது அனைத்து வகையான சான்றிதழ்களும் இந்த சேவையில் இடம்பெறவில்லை. பல்வேறு துறைகளின் சான்றிதழ்கள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன.
2015-ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட சில மின்னணு சான்றிதழ்கள் மட்டுமே தற்போது பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-க்கு முந்தைய ஆவணங்கள் அனைத்தும் இந்த சேவையில் கட்டாயம் கிடைக்கும் என்று கூற முடியாது; அவை சம்பந்தப்பட்ட துறையின் பதிவேற்ற நிலையைப் பொறுத்தது.

பொதுமக்களுக்கு பயனுள்ள சேவை

அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாகப் பெறும் வசதியாக E-பெட்டகம் சேவை உள்ளது. இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சான்றிதழ்களை விரைவாகப் பயன்படுத்த முடியும்.

E-பெட்டகத்தில் கிடைக்கும் ஆவணங்கள், சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மின்னணு வடிவில் பதிவேற்றியுள்ள ஆவணங்களைப் பொறுத்தே இருக்கும். அனைத்து சான்றிதழ்களும் அல்லது அனைத்து ஆண்டுகளுக்குமான ஆவணங்களும் தற்போது கிடைக்காமல் இருக்கலாம். பயனர்கள் தங்கள் விவரங்களை தளத்தில் சரிபார்த்துப் பயன்படுத்துவது நல்லது.

இ-பெட்டகம் செயலியின் முக்கிய நோக்கம்

பாரம்பரிய முறையில் காகித வடிவிலான சான்றிதழ்களை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமங்கள், சான்றிதழ்கள் தொலைந்துபோதல் அல்லது சேதமடைதல் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக இ-பெட்டகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காகிதமில்லாச் சேவை: அரசுச் சான்றிதழ்களைக் கையோடு எடுத்துச் செல்லும் அவசியத்தைக் குறைத்து, டிஜிட்டல் சான்றுகளாகப் பயன்படுத்த வழிவகை செய்கிறது.

சான்றிதழ்கள் அனைத்தும் தமிழக அரசின் பாதுகாப்பான சர்வர்களில் (Data Centers) சேமிக்கப்படுவதால், கசிவு அல்லது முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை. மத்திய அரசின் 'டிஜிலாக்கர்' (DigiLocker) திட்டத்தைப் போன்றே, தமிழக அரசால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, பொதுமக்கள் தங்களது முக்கிய அரசு ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்த்து, பாதுகாப்பாகப் பராமரிக்கவும், தேவைப்படும் இடங்களில் எளிதாகப் பயன்படுத்தவும் பெரும் உதவியாக உள்ளது. இதை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி பலன் பெறலாம்.

Source: Read Full Article