குதிரை பேரம் ; விஜய் தான் முதல் குற்றவாளி !! இரவல் ஆட்சி - டிடிவி தினகரன் சாடல்

குதிரை பேரம் ; விஜய் தான் முதல் குற்றவாளி !! இரவல் ஆட்சி - டிடிவி தினகரன் சாடல்
News Image

" அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் "

சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ;

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழி சொல்வதைப் போல தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாகவும் 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி அமைத்தது போல் விஜய் ஆட்சி அமைக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகளுக்காக திமுகவினர் வேலை செய்து வெற்றி பெற செய்ததாகவும் அவர்களின் வெற்றியால் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.

மதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் திமுக - வால் தான் 2024 ஆம் ஆண்டு துரை வைகோ வெற்றி பெற்றது திமுக ஆதரவில் தான். திமுக உதவியோடு தான் வெற்றி பெற்றோம் என்று மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக பக்கம் நின்று உள்ளனர். தூய சக்தி என்று சொன்ன விஜய் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கேட்டு வீடு வீடாக செல்வது போல் கட்சி அலுவலகங்களுக்கு சென்று ஆட்சி அமைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியிடம் பேச தயார்

விசித்திரமான பொருந்தாத ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆட்சி சென்று விடும் என்ற பயத்தில் தான் பல வேலைகளை அரசு செய்து வருகிறது. அப்பட்டமான சுயநலத்தை தவிர வேறு எதுவும் இல்லாமல் தங்களின் சுயலாபத்திற்காக அதிமுகவை விட்டு தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்து வருகின்ற வருவதாக கூறிய அவர் கட்சியின் நிலைப்பாட்டை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வந்து அதிமுகவில் சேர விரும்பினாலும் அதைப்பற்றி நான் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச தயார்.

அதிமுகவை விட்டு சென்றவர்களின் பெயர்கள் வரும் காலங்களில் கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படும். மதிமுக பொதுசெயலாளர் வைகோ திமுகவை முதுகில் குத்தியுள்ளதாகவும் வயதான காலத்தில் வைகோ தடுமாறி வருகிறார்.

தவெக தூய சக்தி இல்லை

சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே குதிரை பேரும் நடந்துள்ளது என்று நான் தான் கூறினேன். எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் இடம் திருட்டுத்தனமாக ஆதரவு பெற்று முதல் ஆதரவு பெற்றதாகவும் அப்போது நான் கூறுகிறேன். குதிரை பேரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.

திமுக கூட்டணியின் இரவல் ஆதரவில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தமிழக வெற்றி கழகம் ஒன்றும் தூய சக்தி கிடையாது. அது ஒரு நாச சக்தி. ஊழல் வழக்கு உள்ள முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்து எப்படி அவர்கள் தூய சக்தி என்று சொல்வார்கள்.

சின்னப் பையன் நிர்மல் குமார்

அரசியலில் இருந்து திமுக தலைவர் விலக வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்துக்கு பதில் அளித்த டிடிவி தினகரன்

50 ஆண்டு காலம் அரசியல் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து அரசியலை விட்டு விலக வேண்டும் என சின்னப் பையன் நிர்மல் குமார் பேசுகிறார். அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் அது போல தான் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் எவ்வளவு பேசட்டுமோ பேசட்டும் என்றார்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks