முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்

முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்
News Image

மரக்கன்றுகள் நட்டு வைத்து பூங்கா ஆய்வு

சென்னை அண்ணா நகர் 6 - ஆவது நிழற்சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கீழ் உள்ள போகன்வில்லா பூங்கா ரூபாய் 2.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவினை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து பூங்காவை ஆய்வு செய்தார்.

உடன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் மற்றும் சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது ;

சென்னையில் உள்ள மக்கள் இயற்கையோடு வாழ வேண்டும் எனவும்  பெரியவர்கள், குழந்தைகள் ஓய்வு எடுக்கவும் சென்னை அண்ணா நகரில் உள்ள இந்த போகன்வில்லா  பூங்காவில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சென்னை மாநகராட்சி கீழ் உள்ள இந்த போகன்வில்லா பூங்காவாது
ரூபாய் 2.95 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள். அதை போல கழகத்தின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

சென்னை என்பது தமிழ் நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல சிறப்பு மிக்க நகரமாகவும்,  பொலிவான நகரமாகவும் சென்னையை உருவாக்க வேண்டும் என்பது தான் முதல்வர்  அவர்களுடைய கனவு.

நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரின் கல்வெட்டை மீண்டும் வைக்கா விட்டால் திமுக சார்பாக போராட்டம் நடந்தப்படும் என முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது குறித்தான கேள்விக்கு ;

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்துக்கள் இருக்கும். ஒரு அரசு வரும் போது அந்த அரசு செய்கின்ற திட்டங்களை நிறைவேற்றி இறுதியில் அந்த பணிகளை முடிக்கிறார்களோ , அந்த பணிகள் முடிக்கும் போது அதற்கு பொறுப்பு ஏற்று அதனை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் பெயர் தான் கல்வெட்டில் இடம் பெறுவார்கள்.

இதுவரை இருக்கின்ற நிலைப்பாடுகள் அந்த நிலைப்பாடுகளை மாற்றி உருவாக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவது கிடையாது. இதுவரை நாங்கள் முடிக்காத 95 சதவீதம் பணிகளை முடித்து , 5% முடித்து விட்டு கல்வெட்டு போட்டவர்கள் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இந்த கருத்துக்களை சொல்வது வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கிறது.

த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குதிரை பேரம் நடந்துவது குறித்தான கேள்விக்கு ;

எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவது, குதிரை பேரம் நடத்துவது தமிழ்நாட்டில் வரலாற்றில் ஒரு ஆட்சி அமைந்த பிறகு , இந்த ஆட்சிக்கு பல்வேறு கருத்து சொல்ல வேண்டியவர்கள் , நல்ல கருத்துக்களை சொல்ல நாட்டு மக்கள் அவர்களை எதிர்க் கட்சி வரிசையில் அமர வைத்தார்கள்.

ஆனால் அவர்கள் இந்த பணிகளை செய்து இருப்பது வெட்ககேடான விஷயம் இதை செய்பவர்களுக்கு உரிய தண்டனை காவல் துறை மூலமாக கிடைக்கும்.

ஆளுநர் திமுக, அதிமுக குதிரை பேரம் தொடர்பான புகார் அளித்துள்ளது குறித்தான கேள்விக்கு

வேண்டுமென்றே குற்றச்சாட்டை சொல்கிறார்கள் குறிப்பாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பொறுத்த வரை அம்மா காலத்தில் ராஜ்யசபா உறுப்பினர்,  மாவட்ட கழக செயலாளர் என எங்களோடு இருந்து விட்டு , அனுபவித்து விட்டு சென்று திமுக விடம் சென்றார்.

இப்போது திமுகவில் சேர்ந்த பிறகு தனக்கு விளம்பரம் வேண்டும் என்று இது.போன்ற கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

அது தவிர எங்களுக்கு அந்த தேவையே இல்லை என்பது முக்கியமான ஒன்று எங்களுக்கு தேவையான வலிமையான ஆட்சி நடத்துவதற்கு சரியான முறையில் கூட்டணி ஆதரவு தந்து கொண்டிருக்கிறது ஆஸ்டின் போன்றவர்களை நாங்கள் அழைக்கக் கூடிய தேவை இல்லை.

திமுக , அதிமுக பாஜக குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில் தவெக குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்குமா என்ற கேள்விக்கு ;

எதிர்க் கட்சியில் அமர்ந்து இருப்பவர்கள் ஆளுநரை சந்திப்பது வழக்கம். எங்களைப் பொறுத்தவரை தூய்மையாகவும், நேர்மையாகவும், கன்னியத்தோடும், நாட்டை காப்பதற்காக நாள்தோறும் திட்டங்களை முதல்வர் உருவாக்கி வருகிறார். மக்கள் அவர் பின்னால் பெரும் திரளாக நிற்கிறார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks