டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?

டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
News Image

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான தற்காலிக ஆண்டு திட்ட அறிக்கையில் (Annual Planner), நடப்பாண்டில் 7 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசியர் தகுதி தேர்வு நடந்து முடிவடைந்த நிலையில், பொது டெட் தேர்வு அறிவிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2026ம் ஆண்டுக்கான திட்டத்தில் ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்த நிலையில், மே மாத தேர்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசின் 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009'-இன் படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) குறைந்தபட்ச தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் பட்டய ஆசிரியர் படிப்பை (B.Ed / D.El.Ed) முடிக்கும் மாணவர்கள், உடனடியாக ஆசிரியர் பணியில் சேர ஏதுவாக இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். முன்னதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான தற்காலிக ஆண்டு திட்ட அறிக்கையில் (Annual Planner), நடப்பாண்டில் 7 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில், லட்சக்கணக்கானோர் ஆவலோடு எதிர்பார்த்த டெட் தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தாண்டு இறுதியில் இரண்டாவது முறையாக டெட் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டில் இரண்டு முறை டெட் தேர்வு நடத்தப்படும் என வாரியம் தெரிவித்ததால் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு அமைந்த பிறகு டெட் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஜூன் மாதம் பாதியைக் கடந்த நிலையில், இதுவரை தேர்வு வாரியத்திடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதனால், ஆசிரியர் படிப்பை முடித்து  பணிக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த லட்சக்கணக்கான தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மே மாதமே முதலாவது டெட் தேர்வு அறிவிக்கப்பட்டு தேர்வு நடைமுறை நிறைவடைந்தால், இரண்டாவது முறையாக அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் அடுத்த  டெட் தேர்வை நடத்தி முடிக்க முடியும். முதலாவது தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்கள் இந்த ஆண்டிலேயே  அடுத்த  தேர்வுக்கு தயாராகும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அதற்கேற்ப தேர்வு திட்டங்களைத் தயாரிப்பார்கள். ஆனால், தற்போது முதலாவது டெட் தேர்வுக்கான அறிவிப்பே இன்னும் வெளியிடப்படவில்லை என்பது லட்சக்கணக்கான தேர்வர்களை கவலையடைய செய்துள்ளது. எனவே, தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,  ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks