நான் தெருவுக்குள்ள வரனுமா வரக்கூடாதா? வீடியோ எல்லாம் எடுக்கக் கூடாது. எதுனாலும் மனுவா குடு இங்கெல்லாம் பேச முடியாது என பொது இடத்தில் தவெகவினர் மற்றும் செய்தியாளரை மிரட்டிய தவெக எம்.எல்.ஏ.,

எம்.எல்.ஏ தங்கபாண்டியன் காரில் சினிமா காட்சியில் வருவதுபோல அணிவகுத்து வந்தார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதி மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமினை தொடங்கி வைப்பதற்காக தமிழக வெற்றிக்கழக மேற்கு தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன் காரில் சினிமா காட்சியில் வருவதுபோல அணிவகுத்து வந்தார். அப்போது பட்டாசு சத்தத்துடன் எம்எல்ஏ விற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கு கூடிய தவெக தொண்டர்கள் எம்எல்ஏவின் காரை தடுத்து நிறுத்தி கீழே இறங்கி வாங்க அண்ணே கூறினர். ஆனால் எம்எல்ஏ இறங்கலாம் முடியாது என்னனு சொல்லு இங்க பேசக்கூடாது எதுனாலும் மனுவா கொடுங்க என கூறினார். இதனை கேட்டு கோபமடைந்த தவெகவினர் வேறு கட்சியிலிருந்து நம்ம கட்சிக்கு வந்தவங்களுக்கு உடனே பதவி போட்டு கொடுத்திருக்கீங்க நாங்க உங்களுக்காக தேர்தல்ல வேலை பார்த்தோம் உங்களை ஜெயிக்க வைத்தோம் நீங்க எப்படி விஜய் அண்ணனுக்கு இருந்திங்களோ அதே மாதிரி நாங்களும் இருந்தோம் ஆனா இப்ப எங்களுக்கு எந்த பதவியும் இல்லை என கூறினர்.

மிரட்டியதோடு நான் தெருவுக்கு வரணுமா வர வேண்டாமா என கோபத்தோடு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வீடியோ எடுக்கக்கூடாது என மிரட்டியதோடு நான் தெருவுக்கு வரணுமா வர வேண்டாமா என கோபத்தோடு கேள்வி எழுப்பினார். இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டபோது எங்களுக்கு பதவி கொடுக்கவில்லை என கூறியதால் இதனை செய்தியாளர்கள் வீடியோவாக பதிவு செய்ததை பார்த்த எம்எல்ஏ மீண்டும் வீடியோ எடுக்க கூடாது வீடியோவை கட் பண்ணுங்கள் என கோபத்தோடு தடுத்து நிறுத்தினர் மேலும் அருகில் இருந்த அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களை வீடியோ எடுக்க விடாமல் தடுத்தனர்.

இப்படித்தான் இங்க வச்சு தான் பேசுவியா? எதுனாலும் மனுவாக கொடு என கூறினார்.

இதனைத் தொடர்ந்து தவெக தொண்டர்கள் எங்களுக்கு பதவி கொடுங்க என கேட்டபோது இப்படித்தான் இங்க வச்சு தான் பேசுவியா? எதுனாலும் மனுவாக கொடு என கூறினார். மாவட்ட செயலாளர் என்பதால் தான் நேரில் பேசுகிறோம். மனுவாக எப்படி கொடுக்க முடியும் கொஞ்சம் இறங்கி வாங்க என தவெக தொண்டர்கள் கேட்ட போதும் உடனடியாக அங்கிருந்து காரில் சர்றென புறப்பட்டு சென்றார். மேலும் அவரது ஆதரவாளர்கள் எம்எல்ஏ காரை முற்றுகையிட்டு கட்சி பதவி குறித்து கேள்வி எழுப்பிய தவெகவினரை வசை பாடிக் கொண்டே இருந்தனர். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான தங்கபாண்டியன் மற்றும் அவரது மகன் தேர்தலுக்கு முன்பாகவே பதவி வழங்குவதற்காக பணம் பெற்றதாக தவெக பெண் நிர்வாகி குற்றம்சாட்டினார். எம்எல்ஏவாக பதவி ஏற்றபின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரேஷன் அரிசியை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கடும் நெருக்கடி ஏற்பட்டு பெண்கள் மயக்கம் அடைந்தனர். அதனை கண்டுகொள்ளாமல் சென்றது. என அடுத்தடுத்து சர்ச்சைக்கு பெயர் போன எம் எல் ஏ தங்கபாண்டியனின் காரை முற்றுகையிட்ட சம்பவத்தில் புதியதாக கட்சிக்கு வந்தவர்களுக்கு பதவி கொடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எம்எல்ஏ மீதான சர்ச்சையை பேசுபொருளாக்கியுள்ளது

Source: Read Full Article