கூட்டணி தொடங்கி அனைத்து துறை குறித்தும் பேசி நிழல் முதலமைச்சர் போல அமைச்சர் நிர்மல்குமார் உள்ளார்; செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக வைத்துள்ளார்- மூர்த்தி.

பழனி கோயில் நில பத்திரப்பதிவு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை.

மதுரை அய்யர் பங்களா பகுதியில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பழனி கோயிலுக்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்து நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோயில்கள் இடத்தை பதிவே செய்ய முடியாது, கோயில் நிலம், அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப்பதிவு அலுவலக ஆவணங்களில் பதிவு செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டிருக்கும், அதேபோன்று கோயில் நில பத்திரப்பதிவுக்கு முதல்நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும் எனவே பழனி கோயில் நில பத்திரப்பதிவு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை.

நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லவேண்டும்

இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பதிவுத்துறையில் முறைகேடு என்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு அலுவலங்களில் யாரும் பத்திரப்பதிவு செய்யுங்கள் யாருக்கும் யாரும் சொன்னது கிடையாது, சில தவறுகள் நடந்தபோது அப்போது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடு குறித்து புகார் வந்திருந்தால் அப்போதே அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 589 பத்திரப்பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆளை போட்டதாக கூறுகின்றார்; பொறுப்புள்ள அமைச்சர் இது போன்ற பொதுவாக பேசக்கூடாது. சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியை சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக பார்த்துவருகிறார், முதலமைச்சர் போல நிழல் முதல் அமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார் அனைத்து துறைக்கும் பதிலளிக்கிறார். அறநிலையத்துறை இடத்தை பதிவு செய்ய முடியாது. ஆனால் எப்படி பதிவு செய்தனர், குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள் என்றார். ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர், 60 பத்திரபதிவு ஆபிசில் ரைடு நடத்தி 37 லட்சம் கைப்பற்றினார்கள், நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சம் கைப்பற்றினார்கள் அதற்கு என்ன பதில் -இதற்கு யார் பொறுப்பாவது என்றார். அமைச்சர் தனது இரு துறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கூட்டணி தொடங்கி அனைத்து துறைகள் குறித்து ஆல் இந்தியா அளவில் பேசுகிறார். பிரச்னையை திசை திருப்புகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

மேலதிகாரிகளே உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள்

கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத்துறையில் தவறு நடந்தால் மேலதிகாரிகளே உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள்; எல்லா ஆட்சிகாலத்திலும் ஒரே அதிகாரிகள் தான் பணியில் உள்ளனர். 589 பத்திரபதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும் என் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை அமைச்சர் நிர்மல்குமார் கூற வேண்டும். நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்புகளை அமைச்சர் தீர்மானிக்க முடியாது , அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள். வணிகவரித்துறையில் லீக்கேஜ் என நிதித்துறை செயலர் கூறியுள்ளார் - அவர் இருக்கும் போது தான் வருவாய் பெருக்க திட்டம் தீட்டப்பட்டது. யார் கூடுதலாக Guideline மதிப்பு இருக்கிறதோ அதனடிப்படையில் தான் நில மதிப்பீடு பதிவு செய்யப்படும் . பத்திரப்பதிவுத்துறையில் 2021 ல் 10 ஆயிரம் கோடி இருந்த 2026 மார்ச் 25 ஆயிரம் கோடியாக படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு வருவாய் உயர்ந்துள்ளது.

Source: Read Full Article