ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
News Image

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது ;

ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி காலை 11.05 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(வண்டி எண்.22604), மறுமார்க்கமாக காரக்பூரில் இருந்து வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22603) ரத்து செய்யப்படுகிறது.

அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22504) , மறுமார்க்கமாக கன்னியாகுமரில் இருந்து ஆகஸ்டு 7-ந்தேதி மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு திப்ருகார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22503) ரத்து செய்யப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து ஆகஸ்டு 3-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) , அதற்கு மாற்றாக புருலியாவில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும். மறுமார்க்கமாக , நெல்லையில் இருந்து ஆகஸ்டு 5-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22606) , அதற்கு மாற்றாக நெல்லையில் இருந்து ஒரு மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு புருலியா செல்லும்.

மேற்கு வங்க மாநிலம் சாலிமாரில் இருந்து ஆகஸ்டு 4-ந்தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22825)., ஒரு மணி நேரம் தாமதமாக சென்டிரல் வந்தடையும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks