கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இரும்பு உருக்கு ஆலையில் பர்னஸ் கொதிகலன் வெடித்து பீகாரை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். மேலும், வடமாநில தொழிலாளர்கள் ஏழு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் சிதறி உயிரிழந்த தொழிலாளி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் இன்று அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளது. அப்போது பணியில் இருந்த பீகாரை சேர்ந்த ரவி ரஞ்சன்(26) என்ற தொழிலாளர் உடல் சிதறி உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 7 பேர் இரும்பு குழம்பு சிதறி படுகாயமடைந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று பர்னஸ் கொதிகலன் வெடித்து தீப்பிழம்பு ஏற்பட்டதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த வட மாநில தொழிலார்கள் மீட்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் பாகங்கள் சிதறி உயிரிழந்த ரவி ரஞ்சனின் உடலை மீட்டு கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக வெப்பம் காரணமாக பர்னஸ் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், உயிரிழந்த பீகாரை சேர்ந்த ரவி ரஞ்சன் தொழிற்சாலையின் நிரந்தர பணியாளர் எனவும், படுகாயமடைந்த 7 தொழிலாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருபவர்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி உடல்சிதறி உயிரிழந்தது சக தொழிலாளர்கள் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article