கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்

கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
News Image

அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக் கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் ஏரியில் கடந்த 5 - ம் தேதி அடையாளம் தெரியாத அளவில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த சடலத்தை அரக்கோணம் தாலூகா போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து , பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டனர். மேலும், கொலையான நபர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பி.டி.புதூர் பகுதியை சேர்ந்த ஹேமநாதன் (எ) சின்னா ( வயது 23 ) டீ மாஸ்டர் என தெரிய வந்தது. இவர் கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து தனிப்படை போலீசார் திவீர விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரனையில் ஹேமநாதன் (எ) சின்னா கள்ளத் தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

வேலையில் ஏற்பட்ட கள்ளக் காதல்

மேலும் , இந்த விசாரணையில் சம்பத்தப்பட்ட கணவன் சங்கர் , மனைவி கவிதா, ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனையில் அரக்கோணம் அடுத்த கீழாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( வயது 39 ) , இவரது மனைவி கவிதா ( வயது 35 ) இருவரும் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுடன் பி.டி.புதூரை சேர்ந்த ஹேமநாதனும் கட்டிட வேலைக்கு வந்துள்ளார். நாளாடைவில் கவிதாவிற்கும், ஹேமநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கவிதாவின் வீட்டிற்கு ஹேமநாதன் மற்றும் அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் ( வயது 33) ஆகிய இருவரும் அடிக்கடி வருவதை அறிந்த கணவர் சங்கர் இதைக் கண்டித்துள்ளார். மேலும் ஆட்டோ டிரைவரான ஆனஸ்ட்க்கும் கவிதாவின் மீது ஆசை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த ஹேமநாதன் கடந்த 4 - ம் தேதி இரவு கவிதாவின் வீட்டிற்கு வந்து அதிகளவில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முன்கூட்டியே கண்டித்திருந்த சங்கர், சம்பவத் தன்று ஹேமநாதனை சமதானம் செய்து , ஆனஸ்ட் உடன் ஆட்டோவில் அழைத்து வந்து தணிகைபோளூர் ஏரிக் கரையில் உருட்டுகட்டை மற்றும் கத்தியால் பலமாக தாக்கி முகத்தை சிதைத்து சடலத்தை வீசி சென்றுள்ளார்.

இதனையடுத்து சங்கர் அவரது மனைவி கவிதா மற்றும் ஆட்டோ டிரைவரான ஆனஸ்ட் ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, உருட்டுகட்டை, ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks