" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்

" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
News Image

" இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் "

ஈரோடு மாவட்டம் பாரதி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் வினோதினி ( வயது 24 ) இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சாயல்குடியைச் சேர்ந்த நவீன் (எ) நவநீதகிருஷ்ணன் என்ற பட்டதாரி வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் வினோதினியை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். வினோதினியின் தாயை விசாரித்த போது , "வேறொரு ஆணுடன் வினோதினி பேசி வருகிறார் " என்று தெரிய வந்துள்ளது.

முதலில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் வினோதினியின் தாய். அதன் பின்னர் கணவன் மனைவிக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது.

" தொலைபேசியில் தொடர்பு "

நவீன் வினோதினியின் கணவருக்கு வினோதினியும் நவீனும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனால் , மீண்டும் கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் , வினோதினியை மீண்டும் அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் வினோதினியின் கணவர்.

கணவரைப் பிரிந்து தாயாருடன் ஈரோட்டில் வசித்து வந்த வினோதினி, நவீனுடன் தொடர்ந்து தொலைபேசி வழியே தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், கடந்த 1 வருடமாக தம்பதியினருக்கு இடையே எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளது.

பின்னர் , வினோதினி நவீனுடன் கடந்த சில நாட்களாக பேசுவதை குறைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் ஜூலை 28 அன்று இரவு வினோதினியின் வீட்டிற்கு வந்து , முன்பு போல என்னிடம் ஏன் அதிகம் பேசுவதில்லை ? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தீ வைத்து எரிப்பு

இருவருக்குமிடையே தகராறு முற்றிய முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த நவீன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை வினோதினி மீது ஊற்றித் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அந்த சமயத்தில் வீட்டிற்குள் சமைத்து கொண்டிருந்த வினோதினியின் தாய் பேரன் அழும் சத்தத்தினை கேட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது தீப்பற்றிய நிலையில் , வினோதினி இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வினோதினியின் தாய் அவரிடம் இது பற்றி கேட்டுள்ளார். தன்னை நவீன் தான் இவ்வாறு செய்ததாகவும் தன் மகனுடன் வாழ ஆசைப்பட்டதாகவும் அவரது தாயிடம் கூறியுள்ளார்.

மேலும், அவனை விடாதீங்க அம்மா. என் பையனை பார்த்துக் கோங்க. அவ்ளோதான் என் வாழ்க்கை முடிஞ்சி போச்சு என்று இறுதியாக பேசியதாக வினோதினியின் தாய் கூறியுள்ளார்.

இதனையடுத்து ​பலத்த தீக்காயமடைந்த வினோதினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் போது தீக்காயமடைந்த குற்றவாளி நவீன் , கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஈரோடு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர், கரூருக்கு விரைந்து சென்று கரூரில் சிகிச்சையில் உள்ள நவீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks