Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு

Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
News Image

பத்திர பதிவு - நிரம்பி வழியும் கூட்டம்

சொந்தமாக வீடு வாங்க வேண்டும்,நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும். அந்த வகையில் தங்களால் முடிந்த வகையில் சிறுக, சிறுக பணம் சேமித்து வீடு அல்லது நிலங்களை வாங்குவார்கள். அதிலும் அந்த நிலத்தையோ, புதிய வீட்டையோ பத்திர பதிவை நல்ல நாளில் செய்ய பொதுமக்கள் விரும்புவார்கள். ஆனால் அன்றைய தினம் அனைத்து பத்திர பதிவு அலுவலகமும் கூட்டம் நிரம்பி வழியும் இதனால் வேறு வழியில்லாமல் சாதாரண நாளில் பொதுமக்கள் பத்திர பதிவு மேற்கொள்வார்கள்.

ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளில் செய்யும் நற்காரியங்களும் புதிய முயற்சிகளும் பன்மடங்கு பெருகி வளம் தரும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். ஆடிப் பெருக்கு நாளில் விதைத்தால் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் விவசாயம் உள்ளிட்ட பணிகளை தொடங்குவார்கள். எனவே அன்றைய தினம் தாங்கள் புதிதாக வீடுகளை பத்திர பதிவு செய்ய திட்டமிடுபவர்களும் ஆர்வம் காட்டுவார்கள். எனவே அன்றைய தினம் பத்திர பதிவு செய்ய கூடுதல் டோக்கன் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி பத்திர பதிவு செய்ய கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் டோக்கன்- பதிவுத்துறை அறிவிப்பு

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு நன்னாளில் 03.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு தினமான 03.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும்,

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks