தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் இ்ன்று கரூரில் பேசினார். அப்போது, கரூரில் தனது பரப்புரையின்போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பேசினார். இது முழுக்க முழுக்க அரசியல் தொடர்பான பேச்சாகவே அமைந்தது.

அரசுப்பள்ளியில் விஜய் பேச்சு நேரலை:

இந்த சூழலில், விஜய்யின் இந்த பேச்சை அரசுப்பள்ளி ஒன்று நேரடி ஒளிபரப்பு செய்து மாணவர்களை பார்க்க வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் கண்டனம் குவிந்து வருகிறது. தவெக அரசையும் பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு திமுக ஐடி அணி தவெக அரசை கண்டித்துள்ளது. இதுதொடர்பாக, அவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

அரசியல் புகழ் பாட அல்ல:

பள்ளிக்கூடம் அறிவை வளர்க்கத்தான், உங்கள் அரசியல் புகழ் பாடுவதற்கு அல்ல. தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் அரசியல் கைவரிசையைக் காட்டி வந்த தவெகவினர், இன்று உச்சகட்டமாக முதலமைச்சர் விஜய் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்து அராஜகம் செய்துள்ளனர். சிறு பிஞ்சு நெஞ்சுகளில் உங்கள் சுயநல அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?

ராஜ்மோகன் அவர்களே, ஆங்கரிங் வேலை செய்வதற்கு மட்டும்தான் இருக்கிறீர்களா? அல்லது உண்மையிலேயே நீங்கள்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? பள்ளி வளாகத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று ஊடகங்களுக்கு ஒப்புக்கு பேட்டி கொடுத்துவிட்டு, திரைமறைவில் நாடகமாடுவதை நிறுத்துங்கள். உங்கள் வெற்று பேட்டிகளால் இங்கே எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

பள்ளிக்கூடம் அறிவை வளர்க்கத்தான், உங்கள் அரசியல் புகழ் பாடுவதற்கு அல்ல

தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் அரசியல் கைவரிசையைக் காட்டி வந்த தவெகவினர், இன்று உச்சகட்டமாக முதலமைச்சர் விஜய் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்து அராஜகம் செய்துள்ளனர். சிறு பிஞ்சு நெஞ்சுகளில் உங்கள் சுயநல… pic.twitter.com/gsDsJZryGJ

— DMK IT WING (@DMKITwing) July 10, 2026

தரங்கெட்ட செயல்:

குழந்தைகளிடம் அரசியல் விளம்பரம் தேடும் இந்தத் தரங்கெட்ட செயலை செயலிலும் தடுத்து நிறுத்திக் காட்டுங்கள். அரசியல் செய்ய ஆயிரம் மேடைகள் இருக்கின்றன, அங்கே போய் உங்கள் புகழைப் பாடிக்கொள்ளுங்கள். வகுப்பறைகளை உங்கள் சுய விளம்பரக் களமாக மாற்ற நினைத்தால் தமிழ்நாட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பில் இருந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article