“நான் அட்வைஸ் பண்ணல அனுபவத்தில் சொல்கிறேன். மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும்” என்று ஏலகிரி கோடை விழா வெறிச்சோடி காணப்பட்டதை குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி இவ்வாறு தெரிவித்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. சுற்றுலாதளமான இந்த ஏலகிரி மலையில் வருடம் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2018 ஆம் ஆண்டு கோடை விழா நடைபெற்ற நிலையில் ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த வருடம் ஒருநாள் மட்டுமே பெயரளவுக்கு நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடமும் இரண்டு நாட்களாக நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை விழா மிகவும் வெறிச்சோடி காணப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கேசி.வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சையத் பாரூக் பாஷா, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீர்மணி, “கடந்த திமுக ஆட்சியில் இருந்த போது 5 ஆண்டுகளில் கடமைக்காக ஆட்சி முடியும்போது, ஒரு நாள் மட்டு ஏதோ நடக்க வேண்டும் என்ற‌ எண்ணத்தோடு இந்த ஏலகிரி கோடை விழா நடத்தினார்கள்.

அதற்கு முன்பு அம்மா ஆட்சிக்காலத்தில் ஆண்டு தோறும் ஏலகிரி கோடை விழா நடத்தப்பட்டது. தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியில் அதனை முன்னெடுத்து நடத்தி வருகிறது. ஆனால், மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரங்கள் செய்தித்தாள்கள் மூலமாக மக்களுக்கு தெரியும் வகையில் எதையும் செய்யவில்லை” எனக் குற்றச்சாட்டினார்.

மேலும், “அருகில் இருக்கும் திருவண்ணாமலையில் சிறப்பாக கோடை விழா நடத்தி வருகின்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் நமது மாவட்டத்தில் ஏலகிரி மலை கோடை விழா நடத்தவேண்டும்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் அட்வைஸ் பண்ணல அனுபவத்தில் சொல்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிக விளம்பரங்கள் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு தெரிந்திருக்கும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை, அதிமுக ஆட்சியில் கோடை விழாவை சிறப்பாக நடத்தி வந்தோம். எங்களுடைய அனுபவத்தில் சொல்கிறோம். கோடை விழா ஏற்பாடுகளை இன்னும் சிறப்பாக செய்து சினிமா பிரபலங்களை அழைத்து வந்து கவர்ச்சியான முறையில் நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இனிவரும் காலங்களில் தற்போதுள்ள புதிய அரசு சுற்றுலா பயணிகள் மற்றும் மலைவாழ் மக்களின் நலன் கருதி இதை முன்னெடுத்து நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Source: Read Full Article