3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
News Image
3 வருடமான கட்சிக்கே இவ்வளவு திமிரா? என திருச்சியில் நடந்த அதிமுக போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தவெகவை வறுத்தெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், பெண்களை பாதுகாக்க தவறிய தவெக அரசை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அண்ணா திடலில்  அதிமுக மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வளர்மதி, “கிராமங்களில் கழிப்பறை வசதி எப்போதும் இருக்காது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பல பெண்கள் அவரிடத்தில் வந்து குறை சொன்னார்கள். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் ஒதுங்க வேண்டிய சூழல் இருப்பதாக ஆதங்கப்பட்டு மாற்று ஏற்பாடு வேண்டும் என மனு கொடுத்தார்கள். உடனடியாக ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். கிராமப்புறங்களில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட வேண்டும் என  சொல்லி ஒவ்வொரு பேரூராட்சியிலும் கட்டப்பட்டது. அதில் பெண்களுக்கு கழிவறை, குளிப்பறை, துணி துவைக்கும் இடம் கட்டப்பட்டது. அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்குப் பின் திமுக தமிழகத்தில் அதிகாரத்தில் அமர்ந்தது. அன்று முதலமைச்சராக வந்த மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு இதெல்லாம் தேவையா என்ற சொல்லி விட்டு அந்த ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திற்கு பூட்டுப்போட்டு பூட்டி விட்டார். நான் தயவு செய்து பொதுமக்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
லால்குடியில் எடப்பாடி பழனிசாமி வேண்டும் என முடிவு செய்து ஓட்டுப் போட்டீர்கள். ஆனால் மாற்றம் வேண்டும் என நீங்கள் ஓட்டுப்போட்ட அதிமுகவை தீர்ந்து போன கட்சி என சொல்கிறார்கள். இதை யார் சொல்வது என பார்த்தால் புதிதாக கட்சி தொடங்கிய தலைவர் அவர். அவரிடம் ஒன்று கேட்கிறேன். 3 வருடமான கட்சிக்கே இவ்வளவு திமிரா?.. அதிமுக 55 ஆண்டுகள் கட்சி. நாங்கள் தீர்ந்து போய் விடுவோமா?.. நாங்கள் கருணாநிதியின் அடக்குமுறையை பார்த்து வந்தவர்கள்.
திமுக கொடுத்த தண்டனையை தாங்கி வந்தவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்ககூடிய கடைசி தொண்டர் இருக்கும் வரை இந்த அதிமுகவை யாரும் அழிக்க முடியாது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் நீங்களே இருக்கும்போது நாங்கள் 54 வருட ஆலமரம். நீ பெயர்க்க வேண்டுமென்றால் பெரிய புல்டோசர் தான் எடுத்து வர வேண்டும். இந்த இயக்கத்தை எந்த கொம்பனனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” என தெரிவித்தார்.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks