நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!

நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
News Image

பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு சென்னை மேடவாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் போது, அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, மேடவாக்கம் பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.

12-ஆம் வகுப்பு மதிப்பெண்களே போதுமானது; நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா அன்புமணி, பேசுகையில், "நீட் தேர்வு என்பது கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் வகையில், அவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது. இதில் எந்தவிதமான சமவாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கூட தனியார் கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது."

மேலும், "12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் இரவு பகலாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். அந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த வேண்டும். மாணவர்கள் தங்களின் தகுதியை மீண்டும் மீண்டும் எத்தனை முறை தான் நிரூபித்துக் கொண்டே இருப்பது? மாணவர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள், அவர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, நீட் தேர்வு முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் உறுதியான கருத்து" என்று தெரிவித்தார்.

டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது அத்துமீறல் கூடாது

டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த சௌமியா அன்புமணி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடி வருவதைச் சுட்டிக்காட்டினார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவது, கைது நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் வழக்குகள் பதிவு செய்வது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தினார். மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் அரசு நிதானத்துடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசிய அவர், அவர்களுக்குச் சமுதாயத்திலும் அரசிலும் உரிய அங்கீகாரமும், தேவையான உதவிகளும் தடையின்றி வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks