Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
News Image

தவெகவில் உள்ள பலர் முதல்முறையாக எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாகி உள்ள நிலையில், அவர்கள் தடுமாறு கைதூக்கி விட வேண்டும் என We the Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை We the Leaders என்ற அமைப்பை தொடங்குவதாகவும், விரைவில் அரசியல் கட்சியாக இந்த அமைப்பு மாற்றம் பெறும் என தெரிவித்தார். இந்த அமைப்பில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். கடந்த 38 நாட்களில் 19 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் We the Leaders அமைப்பின் போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான அண்ணாமலை ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

தவெகவை கைதூக்கி விடுங்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “நிறைய பேர் என்னிடம், தவெக அரசு வந்து விட்டது. இன்னும் ஏன் நீங்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இரண்டு வார்த்தை பேசி வெளுத்து விடுங்கண்ணே என சொல்கிறார்கள். அப்படி கேட்பவர்கள் மட்டுமில்லை. எல்லாருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் 1.68 கோடி பேர் எனக்கு விஜய் வேண்டும், தவெக ஆட்சிக்கு வர வேண்டும் என தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கு மரியாதை கொடுக்க வேண்டிய நமது கடமையாகும். தவெகவில் வெற்றி பெற்றவர்கள் ஏதோ 10 முதல் 20 ஆண்டுகளாக  எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் இல்லை.

அவர்கள் தட்டு தடுமாறி அரசியலுக்குள் வந்து எம்.எல்.ஏ.,வாக மாறியிருக்கிறார்கள். செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் முதல்முறையாக அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். அதனால் அவர்கள் தடுமாறத்தான் செய்வார்கள். தடுமாறும்போது ஒரு நல்ல சமுதாயமாக இருந்தால் கைதூக்கி விடணுமே தவிர, கீழே அழுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

ஏனென்றால் We the Leaders அமைப்பில் தன்னார்வலர்களாக வந்திருக்கும் நாம் அனைவரும் மூர்க்கத்தனமாக அதிகாரத்தைப் பிடிப்பதற்காக வரவில்லை. ஆணவத்தோடு நாம் இந்த அமைப்பை ஆரம்பிக்கவில்லை. அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பது நமது குறிக்கோள் இல்லை. நல்ல சமுதாயம், தமிழ்நாட்டை உருவாக வேண்டும் என்பது தான் ஒற்றை நோக்கமாகும். அதனடிப்படையில் தான் இந்த அமைப்பும், அரசியலும் இருக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை” என அண்ணாமலை தெரிவித்தார்.

Also Read: CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!

தொடர்ந்து பேசிய அவர், “இனி முதலமைச்சர் விஜயை சிஎம் சார் என அழைப்போம். கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக்கை மூடுவோம் என சொல்லி 717 கடைகள் மூட உத்தரவிட்டார். ஆனால் நாம் கள ஆய்வு செய்ததில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் அந்த இடங்களில் செயல்பட்டு வருகிறது. நாம் We the Leaders அமைப்பு மூலமாக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை விட, ஆரோக்கியமான அரசியல் மூலம் தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும். நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனவும் அண்ணாமலை கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks