தற்போது AI தொழில்நுட்பம் தான் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த AI பயன்படுத்தி தொழிலில் சாதித்தவர்கள், ஸ்டார்ட் அப் தொடங்கி வெற்றி பெற்றவர்கள் என ஏராளமானவர்களை காண முடிகிறது. அப்படி AI கொண்டு சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காகவே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செயலி உருவாக்கம் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி சென்னையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 15ஆம் தேதி 17ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வகுப்புகள் நடக்கின்றன. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள்/ திருநம்பிகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவு கணினி அனுபவம் இருந்தால் போதும். இதற்கு கட்டணம் 6000 ரூபாய் ஆகும். இதற்கு முன்பதிவு அவசியம் என்பதால் www.editn.in என்ற இணையதளம் அல்லது 8668100181 / 9360221280 என்ற எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பவர்கள் தங்கள் யோசனைகளை செயலில் பயனடையும் வகையில் AI prototype-களாக (செயலியாக) மாற்றக் கற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஸ்டார்ட் அப்கள் பயன்படுத்தும் No-Code / Low-Code AI கருவிகள் பற்றிய பயிற்சி, ChatGPT / Gemini Pro / NotebookLM கொண்டு செயலி உருவாக்க பயிற்சி, Firebase / Glide / Zapier / Lovable / Replit / Bolt, Prompt Engineering முறைகள் குறித்து விளக்கப்படுமாம்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம், கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம் கற்றுதரப்பட உள்ளன. மாணவர்கள், நிறுவனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு இது பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுவதால் வேலைவாய்ப்புகளுக்கு உதவும்.

Source: Read Full Article