சென்னை டூ கன்னியாகுமரி இனி சும்மா பறக்கலாம்! தென் தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் 8 வழிச்சாலை!

சென்னை டூ கன்னியாகுமரி இனி சும்மா பறக்கலாம்! தென் தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் 8 வழிச்சாலை!
News Image

Chennai to Kanyakumari travel time: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கவும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 700 கி.மீ தொலைவுக்கு 8 வழி அதிவேகப் பெருவழிச்சாலை (Corridor) அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையை (ECR) விரிவுபடுத்தி உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த 8 வழிச்சாலை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் சுமார் 40 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய திட்டம்

தற்போது சென்னைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடைப்பட்ட 320 கி.மீ தூரத்தில், சுமார் 250 கி.மீ தொலைவிலான சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மரக்காணம் முதல் புதுச்சேரி வரை ரூ.2,157 கோடி மதிப்பீட்டில் 46 கி.மீ தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மாநிலத்தின் பல பகுதிகள் இன்னமும் இரண்டு வழிச்சாலைகளாகவே நீடிப்பதால், சென்னை - திருச்சி போன்ற பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சென்னை - கன்னியாகுமரி 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உடனடியாகக் கையில் எடுத்து நிதியுதவி வழங்கி விரைந்து செயல்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொழில் வழித்தடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு

மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், கனரக வாகனங்களின் போக்குவரத்தைத் தாங்கும் தரமான தொழில் வழித்தடங்களை அமைக்க புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டம் (CPRR) மற்றும் எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்கள் முழுமையடையும் போது, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மிக எளிதாகவும் விரைவாகவும் துறைமுகப் பகுதிகளைச் சென்றடைய முடியும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks