இனி கடன் சுமை குறையுமா? 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கிய முதலமைச்சர் விஜய் - யார் அவர்கள்?

இனி கடன் சுமை குறையுமா? 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கிய முதலமைச்சர் விஜய் - யார் அவர்கள்?
News Image

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நலத்திட்டங்கள் ஏராளமாக செயல்படுத்தப்பட்டாலும் ஊழல், லஞ்சம் காரணமாகவும்   தமிழ்நாட்டின் கடன் சுமை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வருவாய் பெருக்கக்குழு:

முதன்முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமைந்துள்ள விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது கடன்சுமை. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தவெக அரசு செய்ய உள்ள நிலையில், வருமானத்தை 5 ஆண்டுகளில் பெருக்க வேண்டிய கட்டாயமும் விஜய்க்கு உள்ளது.

இந்த சூழலில், தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் வருவாய் பெருக்கக் குழுவை தவெக அரசு நியமித்துள்ளது.

யார்? யார்?

பிரபல பொருளாதார வல்லுனரும், முன்னாள் மத்திய திட்டக்குழு துணை ஆணையருமனா மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. மான்டேக் சிங் அலுவாலியா - தலைவர்

2. முனைவர் கேபி கிருஷ்ணன் - உறுப்பினர்

3. அர்பிந்த் மோடி - உறுப்பினர்

4. நஜீப்ஷா, ஐஆர்எஸ் (ஓய்வு) - உறுப்பினர்

5. எம்.ஏ.சித்திக்  ஐஏஎஸ் - உறுப்பினர்

6. முனைவர் சுரேஷ்பாபு - உறுப்பினர்

பணிகள் என்னென்ன?

இந்த குழு தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசின் கஜானாவில் இருந்து ஆகும் வீண் செலவை எப்படி குறைக்கலாம்? என்று முறையாக ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழு யாருடைய தடங்கலும் இல்லாமல் செயல்படவும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எந்த துறையில் இருந்தும் எந்த தரவுகள், புள்ளிவிவரங்களை இந்த குழு கேட்டாலும் உடனடியாக வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் வருவாய் பெரும்பாலும் டாஸ்மாக் மதுபான விற்பனையையே சார்ந்து இருக்கும் சூழலில், அதன்மூலம் மேலும் வருமானத்தை எப்படி அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து ஆய்வறிக்கை வழங்கவும் இந்த குழுவிற்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு:

தமிழ்நாட்டின் வருமானத்தை அதிகரித்து, கடன் சுமையை குறைப்பதே இந்த குழுவின் பிரதான வேலையாகும். இந்த குழு திறம்பட பணியாற்றும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த குழுவில் இடம்பிடித்துள்ள முனைவர் கேபி கிருஷ்ணன் பொருளாதார பேராசிரியர் ஆவார். அர்பிந்த மோடி வரி கொள்கை நிபுணர் ஆவார். பொருளாதார நிபுணரும் ஆவார். அனைத்து உறுப்பினர்களும் பாெருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசின் எதிர்கால பொருளாதார திட்டங்களை மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks