கரூரில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியபோது முதலமைச்சர் விஜய் கண்கலங்கினார். முதல்வர் கண்கலங்கியதாக பயனாளிகள் தெரிவித்தனர். மேலும், அரசு பணியை பெற மறுத்தவர்களிடம் அதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார்.

கண்கலங்கிய முதல்வர் விஜய்

பணி நியமன பெற்ற பெண்மணி ஒருவர் கூறுகையில், “அவரால் எதுவும் பேசமுடியவில்லை, எங்களாலும் பேசமுடியவில்லை. அவரும் அழுதார், நாங்களும் அழுதோம். இதுதான் அங்கு நடந்தது” என்று கூறினார். மற்றொரு பெண்மணி, தன் மகனை போல, முதல்வர் விஜய் பார்த்துக்கொள்கிறார். தனக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாகவும், வீடு இல்லை என்று சொன்னது என்று சொன்னதும் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் தன்னை பார்த்துக்கொள்பவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததாக கூறினார். மற்றொரு நபர் முதல்வர் விஜய் அழுததாகவும் ரொம்ப வருத்தப்பட்டார் என்றும் கூறினார்.

கரூர் கூட்ட நெரிசல்- 41 பேர் பலி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெக சார்பாக 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பாகவும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

31 பேருக்கு அரசு பணி

இதனையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் இதற்கான பணி ஆணையை வழங்கினார்.

Source: Read Full Article