2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!

2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
News Image

2016-ஆம் ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவதைத் தடுக்கவும் அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள், 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நோட்டுகளுக்கு எல்லாம் மாற்றாக புதிய வடிவம் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் முதல் முறையாக 2000 ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதியது. இன்னும் சொல்லப்போனால் புழக்கத்தில் இருந்த அதிக அளவிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து.. புதிய நோட்டுகளை கொண்டு வந்த மிகப் பெரிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.

பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளையும் 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி செல்லாது என அறிவித்தது. இதனால் அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2023-ஆம் ஆண்டின் அக்டோபர் 7-ஆம் தேதி வரையில் அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாது.

ஆனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மூலம் மாற்றிக் கொள்ளலாம். 2023-ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான போது புழக்கத்தில் சுமார் 3.56 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது.ஆனால் 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 5451 கோடியாக குறைந்தது. 98.47 சதவீத நோட்டுகள் ஏற்கனவே திரும்ப பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீண்டும் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் 2000 நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை இந்தியாவில் இருக்கும் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கொடுத்து தாராளமாக மாற்றிக் கொள்ளலாம் என தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளது. நேரடியாக சென்று பணத்தை மாற்றிக் கொள்ள முடியாதவர்கள், அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆர்பிஐ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பப்படும் நோட்டுக்கு நிகரான தொகை நேரடியாக உங்கள் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks