ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?

ரூ.1 கோடி வேண்டுமா? என்ன செய்யணும்?: தஞ்சாவூர் கலெக்டர் அறிவித்தது என்ன?
News Image

தஞ்சாவூர்: சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27 வழங்கப்பட உள்ளது. இதற்காக சிறந்த ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்படும். எனவே உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 31-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் உயரிய கவுரவம் வழங்கப்பட உள்ளது என்று தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் "சமூக நல்லிணக்க ஊராட்சி" விருதுக்கான 2026–2027 ஆம் ஆண்டின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சாதிப் பாகுபாடற்ற சூழலை உருவாக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை அடையாளம் கண்டு கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தகுதி பெறும் 10 சிறந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் "சமூக நல்லிணக்க ஊராட்சி" விருதும் வழங்கப்படும். இந்த விருது, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஊராட்சிகளுக்கு மாநில அரசின் உயரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

2026–2027 ஆம் ஆண்டிற்கான விருதைப் பெற விரும்பும் தகுதியான ஊராட்சிகள், அதற்கான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆதார ஆவணங்களுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள அனைத்து ஊராட்சிகளும் காலதாமதமின்றி விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் நேரடியாக விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர்  ரேவதி தெரிவித்துள்ளார்.

சமூக ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் முயற்சிகளுக்கு இந்த விருது முக்கிய ஊக்கமாக அமையும் என்பதால், அனைத்து தகுதியான ஊராட்சிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks