திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 116 வயது மூதாட்டி ஒருவர் படியேறி சென்று சாமி தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பக்தியை போற்றும் வண்ணம் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

திருமலை தேவஸ்தானம் கீழ் செயல்படும் திருப்பதி ஏழுமலையான் உலகின் 2வது பணக்கார கடவுளாக அறியப்படுகிறார். இவரைக் காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி உள்ளூர் முதல் உலகம் வரை இருந்தும் வருகை தருகின்றனர். திருமலையில் இலவச தரிசனம், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பக்தர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் திருப்பதியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு வருபவர்களுக்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் 116 வயதான மூதாட்டி ஒருவர் திருமலைக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். நவனீதம்மா என்ற அந்த மூதாட்டி நேற்று காலை அலிபிரி நடைபாதை வழியாக திருமலையை அடைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் ஆரம்பத்தில் அதில் இருப்பவர் யார் என்ற விபரம் தெரியாமல் பலரும் குழம்பினர். ஆனால் மூதாட்டியின் விவரங்கள் தெரிந்தவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அந்த மூதாட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த நவனீதம்மா என்பது தெரிய வந்தது. அவர் திருப்பதி, ஜீவகோனாவில் உள்ள உறவினர்களுடன் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. மூதாட்டியின் விவரங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் பக்தியை போற்றும் வகையில் திருமலை தேவஸ்தானம் நாளை (திங்கட்கிழமை) காலை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஸ்ரீவாரியின் விஐபி பிரேக் தரிசனம் வழங்க முடிவு செய்துள்ளது. நவனீதம்மா பக்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Tirupati Laddu: திருப்பதி லட்டு சுவையாவே இல்ல.. பிரபல நடிகை பகீர் புகார்!

மூதாட்டி வந்த அலிபிரி மலையேற்றப் பாதை என்பது சேஷாசலம் மலைகளின் ஊடே செல்லும் சுமார் 3,550 செங்குத்தான படிகளைக் கொண்ட, மிகவும் கடினமான 11 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பாதையாகும்.இளம் வயதினரும், உடல் தகுதியுடன் இருப்பவர்கள் கூட இந்த பாதையில் ஏற முடியாமல் தவிப்பார்கள். ஏறும் வழியில் ஆங்காங்கே அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டிய சூழலும் உண்டாகும். ஆனால் மூதாட்டி நவனீதம்மா படியேறும்போது, அங்கிருக்கும் பக்தர் ஒருவர் அவருடன் பேசும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. அந்த மூதாட்டி மிகுந்த மன உறுதியுடன் படியேறுவது மகிழ்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் உண்மையான பக்தி உடல் வரம்புகளைக் கடந்தது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article