வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் ரீல்ஸ்காக துண்டை கட்டிக்கொண்டு ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ கடந்த மே 24ம் தேதி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது. அதேபோல் சமூக வலைத்தளத்தில் நாம் இல்லை என்றால் வேற்றுக் கிரகவாசிகள் போல பார்க்கும் சூழலும் உருவாகி விட்டது. மேலும் அதேபோல் ரீல்ஸ் வீடியோவுக்காக உயிரை பணயம் வைப்பது, கவர்ச்சி உடை அணிந்து ஆடுவது, அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது என சிலர் எல்லை மீறி செல்கின்றனர்.

An Indian tourist's viral towel dance that shows a complete lack of civic sense. pic.twitter.com/3W1QDNbiDP

— Damn. (@Theonenameddamn) June 8, 2026

அந்த வகையில் வியட்நாம் நாட்டிற்கு சென்ற இந்திய பெண் ஒருவர் துண்டைக் கட்டிக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ஷாருக்கான் மற்றும் கஜோல் நடித்த பிளாக்பஸ்டர் படமான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ படத்தில் இடம்பெற்ற மேரே க்வாபோன் மே என்ற பாடலுக்கு தான் அந்த பெண் நடனமாடுகிறார். கூட்டம் நிறைந்த தெருவின் நடுவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த பெண் உற்சாகமாக துள்ளிக்குதித்து நடனமாடுகிறார். சுற்றியுள்ளவர்கள் எல்லாரும் அப்பெண்ணை மிரட்சியுடன் பார்க்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானவுடன் பலரும் அந்த பெண்ணின் செயலை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். பொது இடத்தில் அதுவும் வெளிநாட்டில் சென்று இப்படியெல்லாம் வீடியோ எடுத்து பதிவிடுவது நம் நாட்டு மக்கள் மீதான எண்ணத்தை மாற்றி விடும் என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டின் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

<iframe title="DMK vs CPIM: திமுக தயவில் ஆட்சி? ஸ்டாலின்-உதய் vs சண்முகம்.. வெடித்த வார்த்தைப்போர் | MK Stalin" src="https://www.youtube.com/embed/_L51x7Q1190" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இன்னொரு இணையவாசி ஒருவர், “உண்மையிலேயே இந்த மாதிரி செயல் அருவருப்பானது. தயவுசெய்து வெளிநாட்டினர் முன்னிலையில் நம் மக்களைக் களங்கப்படுத்தாதீர்கள். உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் மீதான நற்பெயரும் உணர்வுகளும் ஏற்கனவே சீர்குலைந்துவிட்டன. தயவுசெய்து அதை மேலும் கெடுக்காதீர்கள். ஒரு சில முட்டாள்களுக்காக ஒட்டுமொத்த நாடும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது” என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

லைக்குகளுக்காக இப்படியெல்லாம் செய்யலாமா?.. அந்த பெண்ணின் விசாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே இரு தரப்பு மக்களிடையேயும் நிலவும் நல்ல உறவு தொடர்ந்து மேம்படும். கடந்த காலங்களில் வியட்நாமில் உள்ள விமான நிலைய ஓடுபாதையில் ஒரு இந்தியக் குழுவினர் நடனமாடுவதும், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குள் கர்பா நடனம் ஆடுவதும் போன்றவை பெரும் சர்ச்சையாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article