TVK Alliance meeting : திமுகவை விடக்கூடாது.! தோழமை கட்சிக்கு அவசர அழைப்பு விடுத்த தவெக- விஜய்யின் திட்டம் என்ன.?

TVK Alliance meeting : திமுகவை விடக்கூடாது.! தோழமை கட்சிக்கு அவசர அழைப்பு விடுத்த தவெக- விஜய்யின் திட்டம் என்ன.?
News Image

தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேறுள்ளார்.அந்த வகையில் தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அடுத்ததாக வைகோ தலைமையிலான மதிமுகவும் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் 4 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் விஜயபாஸ்கரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணயவுள்ளார். இதன் காரணமாக அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

விரைவில் இடைத்தேர்தல்

ஏற்கனவே முதலமைச்சர் விஐய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்த நிலையில் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஒட்டு மொத்தமாக தற்போது வரை 6 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறவது உறுதியாகிவிட்டது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் தவெகவிற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 6 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் பட்சத்தில் பெரும்பான்மை இலக்கை ஓரளவு எட்ட முடியும். மேலும் தவெக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே இந்த தேர்தல் தவெகவிற்கு முக்கிய தேர்தலாக உள்ளது. இதே போல திமுக தலைமையும் இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என காய் நகர்த்தி வருகிறது.

திமுகவை வீழ்த்த திட்டம் போடும் தவெக

சட்டமன்ற தேர்தலில் தவெகவின் வெற்றி போலி பிம்பத்தால் கிடைத்தது என கூறி வருகிறது. எனவே இந்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எப்படியும் வெற்றி பெற்று திமுகவின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என திமுக நிர்வாகிகள் களம் இறங்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் தான் ஆளுங்கட்சியான தவெக தங்களது தோழமை கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தவெக அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடன் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஜூலை 1ஆம் தேதி கூட்டணி கட்சி கூட்டம்

அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக மற்றும் தோழமை கட்சிகள் கூட்டம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர் இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலை எதிர்கொள்வது. விரைவில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவது தொடர்பாக தோழமை கட்சிகளும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks