MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு

MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
News Image

MK Stalin TVK Vijay: தவெக அரசுக்கு எதிரான திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சு, ஆற்றாமையா? அனுபவத்தின் மூலமான கணிப்பா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தவெக அரசு நிலைக்காது - ஸ்டாலின்

சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “நம்மை போன்று வெற்றி பெற்ற கட்சியும் இல்லை. தோல்வி அடைந்த கட்சியும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். இடைத்தேர்தல் வரலாம். 3 மாதம் கழித்து தேர்தல் வரலாம். 6 மாதம் கழித்தும் வரலாம்.  ஆட்சி என்பது மெஜாரிட்டியுடன் வெற்றி பெறவில்லை. 234ல் பாதி என்ன? 118 பெற்றிருக்க வேண்டும். எவ்வளவு வெற்றி பெற்றார்கள்? 108. நீங்கள் திமுகதான் வெற்றி பெற வேண்டும், மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்தீர்கள். நம்மோடு இருந்த கூட்டணி கட்சியினர் ஆதரவோடு வண்டி ஓடிகிட்டு இருக்கிறது. ஓடும் வண்டி எங்கே சென்று நிற்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், எது நடந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.  எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். எந்த சூழலிலும் தேர்தல் வரலாம். 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

மீண்டும் மீண்டுமா?

முன்னதாக கடந்த 7ம் தேதியன்று இதேபோன்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், “ தவெக அரசு பொறுப்​பேற்ற நேரத்​தில் 6 மாதங்​களுக்கு இதைப் பற்றி பேசப் போவ​தில்​லை என்​றேன். ஆனால், 6 மாதங்​களுக்கு முன்பே பேச வேண்​டிய சூழ்​நிலை வந்​து​விடுமோ என்று அஞ்​சுகிறேன். 6, 5, 4 மாதங்​கள்​கூட அல்ல, இன்​னும் 3 மாத​மாவது தாங்​குமா என்ற கேள்விக்​குறியோடு​தான் இந்த ஆட்சி நடந்து கொண்​டிருக்​கிறது” என பேசியிருந்தார். இதனால் ஆட்சி கலைப்பு முயற்சியில் திமுக ஈடுபடுகிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழும் என ஒரு முன்னாள் முதலமைச்சரே எப்படி பேசலாம்? என பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். உடனே, ”தங்களுக்கு அத்தகைய எண்ணம் ஏதும் இல்லை எனவும், ஸ்டாலினின் பேச்சு திரித்து பரப்பப்படுவதாகவும்” திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில், தான் 3 மாதங்களில் கூட தேர்தல் வரலாம் என ஸ்டாலின் மீண்டும் பேசியுள்ளார்.

ஆற்றாமையா? நிர்வாகிகளுக்கு ஊக்குவிப்பா..!

தவெக தலைமையிலான அரசு நீடிக்காது என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி உதயநிதி உள்ளிட்ட மற்ற முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இது திமுகவின் ஆற்றாமையையும், இரண்டு வருடங்களுக்கு முன்பு முளைத்த ஒரு கட்சியிடம் தோல்வியிற்றுவிட்டோமே என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையையும் காட்டுவதாக தவெகவினர் குறிப்பிடுகின்றனர். மறுபுறம், கட்சி நிர்வாகிகளை ஊக்குவிப்பதற்காக ஸ்டாலின் இவ்வாறு பேசி வருவதாக உடன்பிறப்புகள் சிலர் கணிக்கின்றனர். இதுபோக திரைமறைவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான பல பணிகள் நடைபெறுவதாகவும், தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை

பவர் சென்டரை சீண்டும் தவெக அரசு:

அதிமுகவிடம் தோல்வியுற்று இருந்தால் கூட திமுகவினர் இந்நேரம் சற்று இளைப்பாறி இருப்பார்கள். ஆனால் தவெகவிடம் தோல்வியுற்றதும், ஸ்டாலினோ தோல்வியுற்று இருப்பதும் தான் அறிவாலயம் தரப்பை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளதாம். அதோடு, அதிமுகவை போன்று இல்லாமல், விஜயின் அமைச்சர்கள் நேரடியாக ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் போன்ற திமுகவின் மையத்தையே தொடர்ந்து நேரடியாக தாக்குகின்றனர். இதனை எதிர்க்கட்சி சற்றும் ரசிக்கவில்லையாம். அதோடு, இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதில் பிரச்னையில்லை, ஆனால் இருவருக்குமே மாற்றாக வந்துள்ள கட்சி நமக்கு பேரபத்தாக முடியக்கூடும் என்பதே திராவிட கட்சிகளின் எண்ணமாக உள்ளதாம். இதற்காக தான் அனைத்து பக்கங்களில் இருந்து எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கி வருகின்றன. திமுக எதிர்ப்பு என்பதையே அதிமுக கைவிட்டுள்ளதையும் காண முடிகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks